பொது செய்தி

தமிழ்நாடு

மூச்சு திணறல் இருப்பவர்களை கண்டறிய தனிப்பிரிவு துவக்கம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சென்னை, சென்னையில் மூச்சு திணறல் உள்ளவர்களை, உடனடியாக கண்டறிந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கும் வகையில், கட்டுப்பாட்டு அறையில், தனிப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது.ஆலோசனை கூட்டம்சென்னையில், கொரோனா மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து, கமிஷனர் பிரகாஷ் தலைமையில், ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது.கூட்டத்தில், கமிஷனர் பிரகாஷ் பேசியதாவது:கொரோனா பாதிக்கப்பட்டவர்களை, மருத்துவ மனையில் அனுமதிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும். களப்பணியாளர்கள், வீடு வீடாக நடத்தும் சோதனையில், மூச்சு திணறல் இருப்பவர்களை கண்டறிய வேண்டும்.அவ்வாறு கண்டறியப்படுவோர் குறித்து, ரிப்பன் மாளிகையில் உள்ள, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களை, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய, கட்டுப்பாட்டு அறையில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்படுகிறது.இந்த பணிகள், மண்டல வாரியாக நடைபெற வேண்டும். இது தொடர்பான அறிக்கையை, தினமும் சமர்ப்பிக்க வேண்டும்.கொரோனா காலத்தில் அடிக்கடி விடுப்பு எடுப்பவர்கள், முறையாக பதிவேடுகளை பராமரிப்பு செய்யாதவர்களை கண்டறிந்து, பணியில் இருந்து உடனடியாக விடுவிப்பதுடன், ஊதிய பிடித்தமும் செய்ய வேண்டும்.தனியார் நிறுவனங்கள், அவர்களின் செலவிலேயே, பணியாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து பரிசோதனை செய்து, மாநகராட்சியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.நோட்டீஸ்சுகாதாரம் இல்லாத கட்டடங்கள், காலி இடங்களில், உரிமையாளர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு குறித்து, முதலில், 'நோட்டீஸ்' வழங்க வேண்டும். மீறினால் அபராதம் விதிப்பதுடன், தொடர்ந்து மீறினால், காலி இடத்தை, 'மாநகராட்சிக்கு சொந்தமானது' என்று அறிவிப்பு பலகை வைப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, கமிஷனர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X