சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' விளையாட்டு அமைந்தகரை நபர் தற்கொலை

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

அமைந்தகரை, 'ஆன்லைன்' விளையாட்டில், ஆயிரக்கணக்கான ரூபாயை இழந்த கல்லுாரி மாணவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை, டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் நித்திஷ்குமார், 20; கல்லுாரி மாணவர். இவர், அரும்பாக்கம், அம்மன் கோவில் அருகே உள்ள பச்சைக்குத்தும் கடையில், பகுதி நேர வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, கடைக்கு சென்ற நித்திஷ்குமார், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர், மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.நித்திஷின் தம்பி சென்று பார்த்தபோது, அவர், கடையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அமைந்தகரை போலீசார் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும், நித்திஷ்குமார், தற்கொலைக்கு முன் எழுதி வைத்த கடிதம், போலீசாரிடம் கிடைத்தது.அதில், 'என் தற்கொலைக்கு, நான் தான் காரணம். குருவி சேமிப்பது போல், சேமித்த பணத்தை, ஆன்லைன் விளையாட்டில் விட்டுவிட்டேன். இழந்த பணத்தை, எப்படியாவது பிடிக்க வேண்டும் என, பணிபுரிந்த கடையில், 20 ஆயிரம் ரூபாயை திருடி, அவற்றையும் இழந்து விட்டேன்.'இது எனக்கு, மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. இந்த முடிவு எடுத்ததற்கு, அம்மா, அப்பா என்னை மன்னிச்சுடுங்க. தம்பியை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் அப்பா' என, எழுதி உள்ளார்.ஆன்லைன் விளையாட்டில், ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்த கல்லுாரி மாணவர், தற்கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
swaminathan - london,யுனைடெட் கிங்டம்
28-ஜூலை-202007:32:17 IST Report Abuse
swaminathan கொடுமை. இந்த விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X