பொது செய்தி

தமிழ்நாடு

உடல் நலம் பாதிக்கப்பட்ட போலீசுக்கு எஸ்.பி., உதவி

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கடலாடி:கடலாடி அருகே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர் வருமானமின்றி தவிப்பதாக தினமலர் இதழில் செய்தி வெளியானதை அடுத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி.,அவருக்கு உதவினார்.

கடலாடி அருகே ஆப்பனுாரை சேர்ந்தவர் உமைய சேகர் 48. இவர் சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் தேவாரம் அணியில் 1998, 1999ல் பணி செய்துள்ளார். ஏர்வாடி போலீஸ் ஸ்டேஷனில் 2015ல் பணி செய்தபோது, எதிர்பாராதவிதமாக இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. உமையசேகர் தற்போது வரை எவ்வித வருமானமின்றி வறுமையில் வாடினார்.

இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் படத்துடன் வெளியானது. ராமநாதபுரம் எஸ்.பி., வருண்குமார் மூலம் வறுமையில் வாடிய போலீஸ்காரர் உமையசேகருக்கு ரூ.15 ஆயிரம் உடனடியாக வழங்கப்பட்டது. தினமலரில் செய்தி வெளியிட்டதற்கும், எஸ்.பி., வருண்குமாருக் கும் போலீஸ்காரர் உமையசேகர் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X