சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியை தற்கொலை 'டைரி'யில் உருக்கம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ஆவடி, 'என்னை ஜோக்கராக நடத்தினர்' என, டைரியில் எழுதி வைத்து, தனியார் பள்ளி ஆசிரியை, ஏரியில் குதித்து தற்கொலை செய்தது, சோகத்தை ஏற்படுத்தியது. அவரது, 8 மாத குழந்தையை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, ஆவடி அடுத்த சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, 30; டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்பவர். இவரது மனைவி புவனேஸ்வரி, 25; தனியார் பள்ளி ஆசிரியை.இவர்கள், ஏழு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு, ஆரோக்கியா, 5, நிக்கிதா, 2, மற்றும், 8 மாத பெண் குழந்தை உள்ளது.புவனேஸ்வரி, கணவருடன் ஏற்பட்ட தகராறில், தன், 8 மாத குழந்தையுடன், கடந்த, 25ல், மாயமானார்.இந்நிலையில், சேக்காடு, கோவிந்தன் தாங்கல் ஏரியில், புவனேஸ்வரியின் சடலம், நேற்று மீட்கப்பட்டது.ஆனால், குழந்தை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. தற்கொலைக்கு முன், புவனேஸ்வரி எழுதிய டைரியை, போலீசார் கைப்பற்றினர்.அதில் அவர், எழுதியிருந்ததாவது:நான் சாகப் போகிறேன். ஏனென்றால், என் நன்னடத்தையை, தினமும் மற்றவர்கள் காயப்படுத்துகின்றனர். என் எல்லா பிரச்னைகளையும் மறக்க, தினமும் காலை, கடவுளிடம் வேண்டுவேன். ஆனால், எல்லாரும் என்னை ஜோக்கராக நடத்தினர். அரசு, இவர்கள் போன்றவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் எழுதியிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X