சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் தாய் - மகன் பலி

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மணலிபுதுநகர், இருசக்கர வாகனம்,லாரியில் மோதி விபத்துக்குள்ளானதில், தாய், மகன் பரிதாபமாக பலியாகினர்.சென்னை, திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ஆனந்த், 22. இவரது தாய், வேளாங்கண்ணி, 53. இருவரும், நேற்று காலை, இருசக்கர வாகனத்தில், பொன்னேரி நெடுஞ்சாலையில், மீஞ்சூர் நோக்கி சென்றனர்.மணலிபுதுநகர் அடுத்த, நாப்பாளையம் மேம்பாலம் அருகே சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த, 'டிரெய்லர்' லாரி மீது, எதிர்பாராத விதமாக, இருசக்கர வாகனம் வேகமாக மோதியது. இதில், ஆனந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த வேளாங்கண்ணி, மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். டிரெய்லர் லாரி ஓட்டுனர் தலைமறைவாகி விட்டார்.மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
28-ஜூலை-202007:36:47 IST Report Abuse
Mani . V லஞ்ச லாவண்யத்தில் ஊறித் திளைக்கும் வட்டார போக்குவரத்து துறையும், போக்குவரத்து காவல்துறையும் சாலை ஓரங்களில் சரியான சமிக்கைகளை, எச்சரிக்கைளை வைக்காமல் நிறுத்தும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதுங்களா ஆபீஸர்ஸ்? எது அவர்கள் அளக்கும் படியில்தான் வாழ்க்கை ஓடுகிறதா? அப்படின்னா ஒண்ணும் செய்ய முடியாதுதான். ஏனென்றால், ஆடம்பரமான வாழக்கைக்கு அவர்கள் அளிக்கும் அன்பளிப்பு கட்டாயம் தேவையல்லவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X