பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி ஆய்வு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கார்த்தி எம்.பி., தலைமையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடந்தது.

இதில் கலெக்டர் ஜெயகாந்தன், டி.ஆர்.ஓ., லதா, டீன் ரத்தினவேல் சுகாதார இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குனர் யசோதா, பேரூராட்சிகளின் துணை இயக்குநர் ராஜா, ஊராட்சிகளின் துணை இயக்குனர் விஜயநாதன், மற்றும் நகராட்சி கமிஷனர்கள் பங்கேற்றனர்.

இதில் கொரோனா தடுப்பு பணி குறித்து விளக்கம் கேட்டார்.நாள் ஒன்றுக்கு ஆயிரம் கொரோனா பரிசோதனை நடத்துவதாகவும்,இதில் 80 பேருக்கு தொற்று உறுதி செய்யப் படுகிறது.எனினும் நாள் ஒன்றுக்கு 450 முதல் 500 பரிசோதனை முடிவு மட்டுமே மேற்கொள்ள வசதியுள்ளது. மீதமுள்ள மாதிரி சேகரிப்பு தனியார் லேப்களுக்கு வழங்கப்படுகிறது. கூடுதலாக கொரோனா பரிசோதனை கருவி விரைவில் வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X