வடபழநி, நடிகை வனிதா குறித்து அவதுாறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சூர்யாதேவிக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மாயமானது குறித்து, மாநகராட்சி சுகாதார துறை, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.நடிகை வனிதா, கடந்த மாதம், பீட்டர் பால் என்பவரை, மூன்றாவது திருமணம் செய்தார்.
சாலிகிராமம், தசரதபுரத்தை சேர்ந்த சூர்யா தேவி, 27, என்ற பெண், வனிதா குறித்து அவதுாறாக பேசி, தன், 'யு டியூப்' சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து, வனிதா அளித்த புகாரின் அடிப்படையில், சூர்யா தேவியை, வடபழநி மகளிர் போலீசார் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.கைது நடவடிக்கை விதிமுறைப்படி, சூர்யாதேவிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேணுகாதேவியும், கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டார்.இதில், சூர்யாதேவி மற்றும் பெண் ஆய்வாளர் ரேணுகா தேவி ஆகியோருக்கு, நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
சூர்யாதேவி வீட்டிற்கு சுகாதரத்துறை ஊழியர்கள் சென்ற போது, அவர் அங்கிருந்து மாயமானது தெரியவந்தது. இதையடுத்து, தான் தலைமறைவாகவில்லை என, சூர்யாதேவி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.இந்நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சூர்யா தேவி மாயமானதால், அவர் பலருக்கு நோய் பரப்பும் தன்மையில் உள்ளார்.இதனால், அவரை கண்டுபிடிக்கும் படி, கோடம்பாக்கம் மண்டல சுகாதார துறை சார்பில், வடபழநி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE