தமிழ்நாடு

துணை கமிஷனர்களிடம் புகார் அளிக்க தனித்தனி 'வாட்ஸ் ஆப்' எண் வெளியீடு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சென்னை, :'பொது மக்கள், சென்னையில் பணிபுரியும், 12 துணை கமிஷனர்களிடமும், 'வாட்ஸ் ஆப் வீடியோ கால்' வாயிலாக புகார் அளிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், வெளியிட்ட செய்திக்குறிப்பு:பொதுமக்கள், சென்னை போலீஸ் கமிஷனர், மகேஷ் குமார் அகர்வாலிடம், 63691 00100 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு, 'வீடியோ கால்' வாயிலாக, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில், மதியம், 12:00 மணியில் இருந்து, 1:00 மணி வரை, புகார் அளிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.அதன்படி, 10 நாட்களில், 188 புகார்கள் பெறப்பட்டன. அவற்றில், 129 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது; 40 புகார்கள், பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, தற்காலிகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளன; 19 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.இந்நிலையில், முதல்வர், இ.பி.எஸ்., அறிவுரையின்படி, இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. இனி, பொதுமக்கள், சென்னையில் பணிபுரியும், 12 துணை கமிஷனர்களிடம், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மதியம், 12:00 மணியில் இருந்து, 1:00 மணி வரை, 'வாட்ஸ் ஆப் வீடியோ காலில்' புகார் அளிக்கலாம்.புகார் அளிக்க வேண்டிய துணை கமிஷனர்களின், 'வாட்ஸ் ஆப்' எண்கள்:ஏற்கனவே, போலீஸ் கமிஷனரிடம், 63691 00100 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, சுருக்கமாக புகார் அளிப்பதில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.இந்த எண்ணிற்கு புகார் அனுப்பலாம். அதுபற்றி ஆராய்ந்து, போலீஸ் கமிஷனர், சம்பந்தப்பட்ட நபரை, வீடியோ காலில் தொடர்பு கொள்வார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X