தமிழ்நாடு

மதுரையில் 12 நாட்களில் 7 கொலைகள் அடுத்தடுத்து... புற்றீசலாய் முளைக்கும் புது குற்றவாளிகள்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
மதுரையில் 12 நாட்களில் 7 கொலைகள்  அடுத்தடுத்து...   புற்றீசலாய் முளைக்கும் புது குற்றவாளிகள்

மதுரை :மதுரையில் ஜூலை 15 முதல் 26 வரையிலான 12 நாட்களில் அடுத்தடுத்து 7 கொலைகள் நடந்தது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் பலர் போலீசிற்கு புதுமுகங்கள். அவர்களின் பின்னணியை விசாரித்து வருகின்றனர்.பழிக்குப்பழி, ரத்தத்திற்கு ரத்தம் என மதுரையில் கொலைகள் நடப்பது சர்வசாதாரணமாகி விட்டது. ஜூலை 15ல் செல்லுார் போஸ் வீதியில் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த கொத்தனார் ராஜ்கிரண் 26, கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளின் விரோதிக்கு நண்பர் என்பதற்காக பழி வாங்கினர். ஜூலை 16ல் பைபாஸ் ரோடு நேரு நகரில் நகை, பணத்திற்காக பஞ்சர்வணம் 65, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுவரை யார் செய்தது எனத்தெரியவில்லை.ஜூலை 17ல் சிக்கந்தர் சாவடி அருகே டூவீலரில் வந்த விக்னேஷ் 24, வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஒரு கொலை சம்பவத்தில் உடனிருந்தார் என்ற காரணத்திற்காக பழி வாங்கப்பட்டார். ஜூலை 21ல் அனுப்பானடி உப்புகார மேட்டில் தனது சகோதரரின் நினைவு தின போஸ்டரை ஒட்டிய முத்துக்குமாரை 28, 'முன்னெச்சரிக்கையாக' போட்டு தள்ளினர். இதன் பிறகு கொலைகள் ஓய்ந்த நிலையில், நேற்றுமுன்தினம் அடுத்தடுத்து ரவுடிகள் மூவர் கொலை செய்யப்பட்டனர்.எல்லீஸ் நகர் போடி லைனில் புல் அறுத்த பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ரவுடி சகோதரர்கள் முருகன், வெள்ளைக்கண்ணு செந்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சிவபாண்டி, சிவக்குமார், சிவராஜ், அருண்குமார் உட்பட 5 பேரிடம் விசாரணை நடக்கிறது. அ.தி.மு.க., வட்ட செயலாளர் ஜெயபாண்டி மகன் லோகேஷ் உள்ளிட்ட சிலர் தலைமறைவாக உள்ளனர்.அடுத்த சில மணி நேரத்திலேயே சிலைமான் புளியங்குளத்தில் ரவுடி தவமணி 28, கொலை செய்யப்பட்டார். இவர் 17 வயது சிறுவனை மது குடிக்க செய்ததற்காக நடந்த இக்கொலையில் சிறுவனின் தந்தை பூமிநாதன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.போலீசார் கூறுகையில், ''கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிலர் புதுமுகங்களாக இருப்பதால் அவர்களின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம். மதுரையில் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் 20 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X