தமிழ்நாடு

ஏற்றுமதி ஜவுளி ரகங்கள் உற்பத்திக்கு...வழிகாட்டப்படுமா

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பகுதி கைத்தறி மற்றும் விசைத்தறிகளில் ஏற்றுமதி ரகங்கள் உற்பத்திக்கான ஆலோசனை, வழிகாட்டுதல் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், கொப்பையம்பட்டி, முத்துகிருஷ்ணாபுரம், எஸ்.எஸ்.புரம் பகுதியில் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலை நம்பி மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் அரசின் இலவச சேலை உற்பத்தி செய்து வருகின்றனர். விசைத்தறிகளில் காட்டன் ரக வேட்டிகள், சேலைகள் உற்பத்தியாகிறது.

அவை தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப் படுகின்றன. நவீனப்படுத்தாத தறிகள், ஜவுளிச்சந்தையில் ஏற்படும் போட்டிகளை சமாளிக்க முடியாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் சமீப காலமாக திணறுகின்றனர்.


மேம்படவில்லை

குறைந்த மதிப்பீடுள்ள ஜவுளி ரகங்கள் மட்டுமே உற்பத்தியாவதால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படவில்லை. மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப தறிகளை நவீனப்படுத்தும் வசதி உற்பத்தியாளர்களிடம் இல்லை. இதனால் நெசவாளர்களுக்கும் நவீன தொழில் நுட்பம் குறித்த திறன் மற்றும் பயிற்சிக்கு வழி இல்லை. கிடைக்கும் தொழிலை தொடர்ந்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர்.


குறைந்தது

20 ஆண்டுக்கு முன் இப்பகுதி கைத்தறி மற்றும் விசைத்தறிகளில் ஏற்றுமதி ரகங்களுக்கான ஆர்டர் கிடைத்து வந்தது. ஜவுளிச்சந்தையில் உலகளாவிய போட்டிகளால் ஏற்றுமதி ரக ஆர்டர் படிப்படியாக குறைந்தது. இதனால் உள்ளூர் ரகங்கள் உற்பத்தி செய்யும் கட்டாயம் ஏற்பட்டது. ஆண்டிபட்டியில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் மீட்டர் அளவில் ஜவுளி உற்பத்தி திறன் உள்ளது.

தேசிய ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் இங்கு தொழில் திறனை பயன்படுத்தவும், ஏற்றுமதி ரக உற்பத்திக்கான நவீன தொழில் நுட்பம் குறித்த பயிற்சி நெசவாளர்களுக்கு கிடைக்கவும் தமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநுால்துறை, கோ-ஆப் டெக்ஸ் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X