பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சிலவரிகளில்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

முகக்கவசம் வழங்கல்

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் நேரு சிலை அருகே சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., தலைமை வகித்து பொது மக்களுக்கு கொரோனா தடுப்பு முகக்கவசம், கபசுரக்குடிநீர் வழங்கினார். இன்ஸ்பெக்டர்கள் ராமலட்சுமி, விக்டோரியா லுார்து மேரி, செந்தில்குமார் எஸ்.ஐ.,க்கள், போலீசார் உடனிருந்தனர். ஏற்பாடுகளை ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

நிலக்கடலை விதைப்பு

ஆண்டிபட்டி: மறவபட்டி குத்ராயப்பெருமாள் கோயில் மலையடிவாரப்பகுதியில் நுாற்றுக் கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. செம்மண் நிறைந்தது. விவசாயிகள் அடுத்தடுத்து பெய்த மழையில் நிலங்களை பண்படுத்தி விதைப்புக்கு தயார் நிலையில் வைத்திருந்தனர். நான்கு மாதத்தில் பயிராகும் நிலக்கடலை, 10 மாதத்தில் பயிராகும் துவரை விதைப்பு செய்து வருகின்றனர்.

காய்ச்சல் பாதிப்பு

தேவதானப்பட்டி: நல்லகருப்பன்பட்டி நுகர்பொருள் வாணிப கழக கோடவுனில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மூடப்பட்டது. இக்கிராமத்தை சேர்ந்த சரணவன் 40, நாகம்மாள் 70, உட்பட10க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உடலில் வலி உள்ளது. என்ன வகை காய்ச்சல் என கண்டறிந்து பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதாரக்கேடு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி சக்கம்பட்டியில் 10 இடங்களில் ஆண், பெண்களுக்கு தனித்தனி நவீன கழிப்பறைகள் உள்ளன. கட்டண வசூலிப்பில் முறைகேடு புகாரில் பராமரித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். கட்டணம் இல்லாத கழிப்பறைகளாக மாற்றப்பட்டது. ஆனால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. கிருமிநாசினி தெளித்து முறையாக சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரைப்பாலம் சேதம்

போடி-: போடி ஒன்றியம் காமராஜபுரம் ஊராட்சியில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தெருக்களில் ரோடு, சாக்கடை தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் வீடுகளின் முன் கழிவுநீர் தேங்கி மக்கள் சிரமப்படுகின்றனர். இரவில் மின்தடையில் விபத்து ஏற்படுகிறது. இவற்றை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

ஆர்ப்பாட்டம்

தேவதானப்பட்டி-: தேவேந்திரகுல வேளாளர் என்ற அரசாணை வெளியிடக் கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வடுகபட்டியில் உள்ள பெரியகுளம் ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் திருமுருகன் தலைமை, இணைச் செயலாளர் பாலா முன்னிலை வகித்தனர். பெரியகுளம் ஒன்றிய தலைவர் பிரபு, இணைச் செயலாளர் மாரிசாமி, கெங்குவார்பட்டி செயலாளர் ரமேஷ் பாண்டியர் , ஒன்றிய இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன் பங்கேற்றனர்.

ரோடு அமைக்க எதிர்ப்பு

கூடலுார்: சுருளிப்பட்டி பாரஸ்ட் பங்களா அருகே ஆற்றங்கரைக்கு செல்லும் பாதையில் ஊராட்சி சார்பில் பேவர் பிளாக், தார்சாலை அமைக்கும் பணி துவங்கியது. தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி அப்பகுதி மக்கள் ரோடு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். ஊராட்சி தலைவர் நாகமணி தகவலில் போலீசார், வருவாய்த்துறையினர் அவர்களிடம் பேசியதில் கலைந்து சென்றனர். தொடர்ந்து ரோடு பணி நடந்தது.

தற்கொலை

போடி: போடி புதுார் வலசத்துறை ரோட்டில் வசிப்பவர் பாலு 54. மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக குடியிருந்து வந்தார். மனம் உடைந்த பாலு நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போடி டவுன் போலீசார் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X