தமிழ்நாடு

தமுக்கம் கலையரங்கு கட்டுமானத்தில் தாமதம் கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

மதுரை, மதுரை தமுக்கம் கலையரங்கு கட்டுமானப் பணியில் தாமதம் ஏற்படக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இளம் காளைகள் அறக்கட்டளை நிறுவனர் நேதாஜி கார்த்திகேயன் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரையை ஆட்சி புரிந்த ராணி மங்கம்மாளால் தமுக்கம் மைதானம் உருவாக்கப்பட்டது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் மைதான அடையாளத்தை சிதைக்க முயற்சி நடக்கிறது. வணிக வளாகமாக மாற்றி, பெரும் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு செல்ல உள்ளது. சித்திரைப் பொருட்காட்சி உள்ளிட்ட கண்காட்சிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படும் சூழல் உள்ளது. கட்டுமானப் பணிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்தது.மாநகராட்சி தரப்பில்,'தமுக்கத்தில் இருந்த பழைய கலையரங்கை அகற்றிவிட்டு, அதே இடத்தில் நவீன வசதிகளுடன் புதிய கலையரங்கு அமைக்கும் பணி நடக்கிறது. 40 சதவீத பணி முடிந்துள்ளது. மீதியுள்ள திறந்தவெளி இடத்தில் வழக்கம்போல் கண்காட்சி நடத்த அனுமதிக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள்: கலையரங்கு கட்டுமானப் பணியில் தாமதம் ஏற்படக்கூடாது. மக்கள் வரிப்பணத்தை செலவிடுவதால், பணி தரமாக இருக்க வேண்டும். பணி முடிந்தபின் தமுக்கத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டு பைசல் செய்தனர். கலையரங்கு கட்டுமானப் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் தற்போதைய நிலை குறித்து செப்.,8 ல் மாநகராட்சி கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X