ஆக.1 முதல் ஊரடங்கை தளர்த்தி போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆக.1 முதல் ஊரடங்கை தளர்த்தி போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

Added : ஜூலை 28, 2020
Share
மதுரை, ''ஆக. 1 முதல் ஊரடங்கை தளர்த்தி போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்'' என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், முதுநிலை தலைவர் ரத்தினவேலு வலியுறுத்தி உள்ளனர்.அவர்கள் கூறியதாவது: 130 நாட்களாக அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் தொழில் வணிகத்துறையினர் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள்



மதுரை, ''ஆக. 1 முதல் ஊரடங்கை தளர்த்தி போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்'' என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், முதுநிலை தலைவர் ரத்தினவேலு வலியுறுத்தி உள்ளனர்.அவர்கள் கூறியதாவது: 130 நாட்களாக அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் தொழில் வணிகத்துறையினர் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருட்டு, வழிப்பறி துவங்கியுள்ளன. போதும் கட்டுப்பாடுகள். பொருளாதார வளர்ச்சியை திறந்து விடுங்கள். இல்லாவிடில் தொழில், வணிகத்தை சீரமைக்க முடியாது. வளர்ச்சியில் பல ஆண்டுகள் பின்னுக்கு தள்ளப்படுவோம்.பொருட்களை சந்தைப்படுத்த மாநிலம் முழுவதும் பயணிக்க வேண்டியுள்ளது. மாநிலத்திற்குள் பயணிகள் வாகன போக்குவரத்திற்கு எந்த தடையும் கூடாது. பெரிய அளவில்கூட்டம் கூடும் சந்தைகள், வழிபாட்டு தலங்கள், தியேட்டர்களை கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிக்கலாம். தங்கும் விடுதிகள், மால்கள் திறக்கப்பட வேண்டும். பள்ளி,கல்லுாரி திறப்பை ஒத்திவைக்கலாம். கொரோனா தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்ட பின் மாநிலத்திற்குள் வர விரும்புவோரை அனுமதிக்கலாம். தற்போது கொரோனா பாதிப்பு சதவீதம் குறைய துவங்கி விட்டது. பாதிக்கப்பட்டோரும் விரைந்து குணமடைந்து வருகின்றனர், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X