சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் -ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

மதுரை, :மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் இளங்கோ, மொக்கமாயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக அவசர சட்டம், விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவை அவசர சட்டம், மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது. பின் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரனிடம் மனு அளித்தனர்.மேலுார்அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் கறுப்பு கொடி ஏந்தி நடந்த ஆர்பாட்டத்திற்கு தாலுகாசெயலாளர் அடக்கிவீரணன் தலைமை வகித்தார். கொட்டாம்பட்டியில் தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கூட்டணி கட்சிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X