சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி இறப்பில் சந்தேகம்: தொழிலாளி புகார்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

தேனி:பெரியகுளம் அருகே டி.கள்ளிபட்டியை சேர்ந்த தொழிலாளி பாண்டி கண்ணன். இவர் தனது குடும்பத்தினரோடு, பிறந்து பத்து நாட்கள் ஆன குழந்தையுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அதில்,' மனைவி ராஜியை 22, 2வது பிரசவத்திற்காக ஜூலை 17 ல் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தேன். பரிசோதனையில் கொரோனா இல்லை என்றனர். ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் கொரோனா உள்ளது என கூறி என்னை பார்க்க அனுமதிக்க வில்லை. ஜூலை 20 ல் அவர் கொரோனாவால் இறந்ததாக டாக்டர்கள் கூறினர்.

இதனால் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிரசவத்தின் போது உடனிருந்த தாயாருக்கு கொரோனா இல்லை. இறந்தவரின் கொரோனா நடைமுறை பின்பற்றாமல் ஒப்படைத்தனர். எனவே இம் மரணம் குறித்து விசாரணை நடத்தி உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X