பாக்.,கில் 88 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: பாக்.,கில் கொரோனா பாதித்தவர்களில் 88 சதவீதம் பேர் தொற்றிலிருந்து மீண்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பாக்.கில் இதுவரை மொத்தம் 2,74,289 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 2,41,026 பேர் தொற்றிலிருந்து குணமைடந்துள்ளனர். தற்போது 27,421 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.



latest tamil news



இருப்பினும் அந்நாட்டில் கொரோனா தொற்று முற்றிலும் நீங்கவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,176 பேரிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்றினால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,74,289 ஆக அதிகரித்தது. கடந்த ஒரு நாளில் 20க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5,842 ஆக அதிகரித்துள்ளது.

சிந்து மாகாணத்தில் அதிகபட்சமாக 1,18,311 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 92,073 பேரும், கைபர் பக்டுன்க்வாவில் 33,397 பேரும், இஸ்லாமாபாத்தில் 11,601 பேரும், பலுசிஸ்தான் மாகாணத்தில் 2,034 பேரும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 1,989 பேரும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.


latest tamil news



இதுவரை மொத்தம் 18 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,056 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இவ்வாறு அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
28-ஜூலை-202017:12:28 IST Report Abuse
M.COM.N.K.K. இது எண்பத்தியெட்டு சதவீதம் பொய்யாகவே இருக்கும்
Rate this:
Cancel
28-ஜூலை-202015:59:58 IST Report Abuse
Ganesan Madurai மிகவும் வடிகட்டிய பொய். ஐக்கிய அமீரகத்தில் இருந்து பாகிஸ்தான் செல்லும் யாருக்கும் கொரோனா பரிசோதனை கிடையாது என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. பரிசோதனை செய்யாமல் வியாதி குறைந்ததாகக் கூறுவது திருவோடு முல்லா பக்கிரி இம்ரானின் அபாண்டமான பொய்.
Rate this:
Cancel
28-ஜூலை-202013:05:11 IST Report Abuse
நக்கல் வழக்கம் போல சுத்த பொய்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X