பொது செய்தி

தமிழ்நாடு

ஹிந்து மத பாதுகாப்பு சட்டம் உருவாக்க க்கோரி ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

தேனி:தேனி கலெக்டர் அலுவலகம் முன் பாரதிய ஹிந்து பரிவார் ஆலய வழிபாட்டு அணியினர் மாநிலத்தலைவர் சீனிப்பாண்டியன் தலைமையில் மாவட்ட தலைவர் ஆனந்த முருகன், ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் வழங்கிய மனுவில் 'ஹிந்து மதத்தை இழிவாக பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் ஹிந்து மத பாதுகாப்பு சட்டம் உருவாக்க வேண்டும்,' என வலியுறுத்தினர்.

*ஊஞ்சாம்பட்டி ஊராட்சி துாய்மைப்பணியாளர்கள் 15 பேர் வழங்கிய மனுவில்,' ஊராட்சி தலைவர், செயலர் தங்களை அவதுாறாக பேசி வேலைக்கு வர கூடாது என்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வேலை வழங்க வேண்டும்,' எனக்கோரி னர். பணியாளர்கள் கல்யாணி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.

* குறமகள் வள்ளி பெருந்தகை பாசறை சார்பில் மகளிரணி செல்வி தலைமையில் மனு அளித்தனர். குறவன், குறத்தி ஆட்டம் என்ற பெயரில் யூ டியூப் பில் பதிவிடுகின்றனர். இதனை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X