பொது செய்தி

இந்தியா

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி., இழப்பீடு ரூ. 1,65,302 கோடி : விடுவித்தது மத்திய அரசு

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ஜி.எஸ்.டி., இழப்பீடாக, ரூ. 1,65,302 கோடி ஜி.எஸ்.டி., விடுவித்தது.கடந்த, 2017, ஜூலை,1ல், ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரி விதிப்பால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பு, ஐந்து ஆண்டுகளுக்கு ஈடு செய்யப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதன்படி, நடப்பு, 2019-20- ம் நிதியாண்டில்,
GST compensation, GST, economy

புதுடில்லி: மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ஜி.எஸ்.டி., இழப்பீடாக, ரூ. 1,65,302 கோடி ஜி.எஸ்.டி., விடுவித்தது.

கடந்த, 2017, ஜூலை,1ல், ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரி விதிப்பால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பு, ஐந்து ஆண்டுகளுக்கு ஈடு செய்யப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.


latest tamil news
அதன்படி, நடப்பு, 2019-20- ம் நிதியாண்டில், முதல்கட்டமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, 15 ஆயிரத்து, 340 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி., இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மாநிலங்களுக்கு ரூ.1,65,302 கோடி ஜி.எஸ்.டி இழப்பீட்டை மத்திய அரசு வழங்கி உள்ளது.

இதில் தமிழகத்துக்கு மட்டும் ரூ. 12,305 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரிக்கு ரூ. 1057கோடி ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு வழங்கியது. இந்த இழப்பீட்டுத் தொகையானது கொரோனா பாதிப்புகள் இருக்கும் சமயத்தில் தக்க சமயத்தில் மாநில அரசுகளுக்குக் கிடைத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
28-ஜூலை-202018:05:29 IST Report Abuse
Endrum Indian ஐயோ ஐயோ ஜீ எஸ் டி யால் ஒரு பிரயோஜனமில்லை என்று எல்லா அரசியல்வாதிகளும் ஒரு சேர கூப்பாடு விட்டார்களே ஏன்?வரி விதிப்பு பல விதமாக இருந்தால் நல்லது தானே ???இப்படியெல்லாம் சொன்னது ஏன்?அதில் கொள்ளையடிக்க???என்ன சுடலை கான் பப்பு கான் உன்னுடைய எகோனோமிக்ஸ் சரிந்ததா
Rate this:
Cancel
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
28-ஜூலை-202008:58:56 IST Report Abuse
KumariKrishnan Bjp ஜி.எஸ்.டி யால் பொதுமக்களுக்கு வரி குறைந்ததற்கு இந்த நஷ்டஈடு சாட்சி ஜி.எஸ்.டி மூலம் மத்திய பாஜக அரசு வரியினை பெருமளவுக்கு குறைத்தது அப்படி மத்திய பாஜக அரசு வரியை குறைத்ததால் ஏற்கெனவே அதிக வரி வாங்கிக்கொண்டிருந்த மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டது அதை சரி செய்யவே மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கி மாநிலங்களுக்கு தருகிறது ஆனால் நமது வியாபார பத்திரிக்கைகள் ஜி.எஸ்.டியால் வரி கூடிவிட்டது என்று பொய்யை சொல்லி கத்தினார்கள், விவாதங்களை நடத்தினார்கள் உண்மையில் ஜி.எஸ்.டி வந்ததும் மளிகைப் பொருட்களின் விலை மூன்றில் ஒரு மடங்கு குறைந்தது பாஜக ஆட்சியின் காரணமாக வரி குறைந்து விலைவாசி குறைந்து, விலைவாசி குறைந்ததால், மாதாமாதம் குறைந்த அளவு ரூ. 1000 முதல் குடும்ப செலவில் மிச்சம் ஏற்பட்டபோதும், அதையெல்லாம் மக்கள் கருத்தில் கொள்ளமுடியாத அளவுக்கு ஊடகங்களும் பத்திரிக்கைகளும் மூழைச்சலவை செய்தன குழம்பிப்போன பொதுமக்கள் மோடி என்னவோ தவறு செய்ததாகவே நம்பி எதிராக வாக்களித்தார்கள் இப்போதுதான் தெரிகிறது, மக்களிடம் வரிபோட்டு சுரண்டிக்கொண்டிருந்த மாநிலங்களுக்கு நஷ்டஈடு கொடுக்கும் அளவுக்கு நரேந்திரமோடி பொதுமக்களுக்கு லாபம் ஏற்படுத்தியிருக்கிறார் என்பது ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சியில் மாநிலங்களில் மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 35 சதவிகிதம்தான் மாநிலங்களுக்கு தரப்படும், ஆனால் மோடி அரசு அதை 50 சதவிகிதமாக ஜி.எஸ்.டி யில் கூட்டியது எனினும் இந்த அளவுக்கு நஷ்டஈடு வழங்கப்படுகிறதென்றால் ஜி.எஸ்.டி யால் வரிகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது என்பதே பொருளாகிறது 2019-20- ம் நிதியாண்டில், முதல்கட்டமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, 15 ஆயிரத்து, 340 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி., இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது என்பதன் பொருள் என்னவென்றால், இன்னும் இதே நிதியாண்டுக்கு வழங்கப்படும் என்பதுதான் இம்மாதிரி இதே நிதியாண்டில் மூன்று தவணைகள் வழங்கப்படலாம்
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
28-ஜூலை-202008:09:34 IST Report Abuse
VENKATASUBRAMANIAN வட போச்சே ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் supporting reporters like RK, லட்சுமணன், ஆழி. இவர்கள் இனிமேல் debate ல் என்ன பேசுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X