சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனியில் 234 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

தேனி:தேனியில் டாக்டர்கள், தபால் நிலைய ஊழியர்கள், போலீஸ்காரர் உட்பட 234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தேனி வீரபாண்டி போலீஸ் குடியிருப்பு 50 வயது போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ., போடி அரசு மருத்துவமனை தேனி நடுத்தெரு 52 வயது பெண் டாக்டர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை பயிற்சி டாக்டர்கள் இருவர், எம்.சுப்புலாபுரம், கோட்டூர், வெள்ளையம்மாள்புரம், தேனி அல்லிநகரத்தை சேர்ந்த தலைமை தபால் நிலைய ஊழியர்கள் நால்வர், அல்லிநகரம் கம்பர் தெரு 23 வயது டாக்டர் பாதிக்கப்பட்டனர்.

போடி கருப்பன சந்து 24 வயது நகராட்சி பெண் ஊழியர், பி.ஹெச்., ரோடு 37 வயது ஆண் டாக்டர், பெரியகுளம் நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலக 38 வயது போடி பெண் ஊழியர், சின்னமனுார் ஒன்றியத்தில் தேவாரம் 48 வயது தனியார் பள்ளி ஆசிரியை பாதிக்கப்பட்டனர்.

உத்தமபாளையம் ஒன்றியத்தில் கூடலுார் வடக்கு ஸ்டேஷன் கரிமேட்டுப்பட்டி 33 வயது பெண் போலீஸ்காரர், கம்பம் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலக 55 வயது சிறப்பு நிலை போர்மேன், கம்பம் 24 வயது தேனி தீயணைப்பு நிலைய வீரர், திண்டுக்கல் வடமதுரை கானபாடி 36 வயது உத்தமபாளையம் ஸ்டேஷன் பயிற்சி எஸ்.ஐ., காமயக்கவுண்டன்பட்டி 36 வயது நர்ஸ் பாதிக்கப்பட்டனர். பெரியகுளம் தென்கரை ஸ்டேஷன் டி.கள்ளிப்பட்டி 34 வயது போலீஸ்காரர் உட்பட மாவட்டத்தில் மொத்தம் 234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X