கொடை அ.தி.மு.க.,வுக்கு புதுரத்தம் பாய்ச்ச வலியுறுத்தல் சாட்டையை சுழற்றுவாரா புதிய செயலாளர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கொடை' அ.தி.மு.க.,வுக்கு புதுரத்தம் பாய்ச்ச வலியுறுத்தல் சாட்டையை சுழற்றுவாரா புதிய செயலாளர்

Added : ஜூலை 28, 2020
Share
கொடைக்கானல்:கொடைக்கானல் அ.தி.மு.க., வில் புதுரத்தம் பாய்ச்ச வேண்டுமென தொண்டர்கள் வலியுறுத்துகின்றனர்.கொடைக்கானல் மேல், கீழ்மலை ஒன்றியங்களில் நிர்வாகிகளின் செயல்பாடால் தொண்டர்கள் அதிருப்தியுடனே உள்ளனர். மேல்மலையில் கட்சியினருக்குள் இணக்க மில்லாதது, உட்கட்சி பூசல் மட்டுமின்றி, மன்னவனுார் குடிமராமத்து பணியில் விவசாயிகளுடன் மோதல், சில்லரை மதுவிற்பனையில் வசூல்

கொடைக்கானல்:கொடைக்கானல் அ.தி.மு.க., வில் புதுரத்தம் பாய்ச்ச வேண்டுமென தொண்டர்கள் வலியுறுத்துகின்றனர்.

கொடைக்கானல் மேல், கீழ்மலை ஒன்றியங்களில் நிர்வாகிகளின் செயல்பாடால் தொண்டர்கள் அதிருப்தியுடனே உள்ளனர். மேல்மலையில் கட்சியினருக்குள் இணக்க மில்லாதது, உட்கட்சி பூசல் மட்டுமின்றி, மன்னவனுார் குடிமராமத்து பணியில் விவசாயிகளுடன் மோதல், சில்லரை மதுவிற்பனையில் வசூல் போன்ற பிரச்னைகளும் அதிருப்திக்கு காரணமாக உள்ளன.

உள்ளாட்சி தேர்தலில் செல்வாக்கு இல்லாதவர்களுக்கு சீட் வழங்கி தோல்வி கண்டது, கீழ்மலை, மேல்மலை பகுதிகளில் சொற்ப வாக்குகளில் வென்று ஒன்றியத்தை கோட்டை விட்டது போன்றவையும் காரணமாக உள்ளன. இதனால் எம்.எல்.ஏ., எம்.பி., ஒன்றியம் என எல்லா விஷயங்களிலும் தி.மு.க.,வினரின் கையே ஓங்கி உள்ளது.

ஒன்றிய செயலரின் நிர்வாக குறைபாடு குறித்து மாவட்டத்திற்கு தொண்டர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது தி.மு.க., பாணியில் அ.தி.மு.க., தலைமை, மாவட்ட செயலர்களை நியமித்துள்ளது. புதிய மாவட்ட செயலர் தொண்டர்களின் மனமறிந்து, ஜெயலலிதா போன்று அதிரடி நடவடிக்கையால், புதுரத்தம் பாய்ச்ச நடவடிக்கைவேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X