வேடசந்துாரில் 'சப் - வே' அமைக்க வலியுறுத்தல்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

வேடசந்துார்:திண்டுக்கல்--கரூர் நெடுஞ்சாலையில் வேடசந்துாரில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்ல 'சப்-வே' அமைக்கவில்லை. இதனால் பைபாஸ் ரோட்டில் வரும் வாகனங்கள் ஒட்டன்சத்திரம் செல்ல வேடசந்துார் நகருக்குள் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதேபோல், ஒட்டன்சத்திரத்தில் இருந்து கரூர் செல்லும் வாகனங்களும்வேடசந்துாருக்குள் வந்து செல்ல வேண்டும்.இதை தவிர்க்க பைபாஸ் ரோட்டில் 'சப்-வே' அமைத்தால் வாகனங்கள் சில கி.மீ., க்கு சுற்றி செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. 'சப்-வே' அமைக்க ஒதுக்கப்பட்ட இடமும் மணல் பரவி கிடக்கிறது.

மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.சமூக ஆர்வலர் டி.ராமசாமி கூறுகையில்,''சப்-வே அமைக்காததால் வாகனங்கள்வேடசந்துார் வந்து செல்வதால்நகருக்குள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X