பேச்சுவார்த்தையால் போராட்டம் ரத்து

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

பழநி:பழநியில் ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தையால் போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

பழநி கோவில் கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லுாரிகளில் தொகுப்பூதிய ஆசிரியர்கள், கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பணியாளர்கள், சிகைத் தொழிலாளர்கள், காவலர்களுக்கு கொரோனா கால நிவாரணம் அளிக்க வேண்டும் என கோரி கம்யூ., கட்சியினர் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.

ஆர்.டி.ஓ., அசோகன் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது.தாசில்தார் பழனிச்சாமி, கோயில் உதவி ஆணையர் செந்தில் குமார் பங்கேற்றனர். சிகை தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு நிவாரண தொகை தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. கல்லுாரி ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. அர்ச்சகர்கள் முறைப்படியான ஊதியத்தில் வருவதில்லை என கோயில் உதவி ஆணையர் விளக்கம் அளித்தார்.

மேலும் ஆர்.டி.ஓ.,, அவர்களது கோரிக்கையை ஏற்று அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்ததால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. கட்சி நிர்வாகிகள் ராஜமாணிக்கம், கந்தசாமி கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X