பிளஸ் 2 தேர்வில் 13 பேர் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வில் 13 பேர் பங்கேற்பு

Added : ஜூலை 28, 2020
Share

திண்டுக்கல்:தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2 முதல் 24 வரை நடந்தது. ஊரடங்கால் மார்ச் 24 ல் நடந்த வேதியியல், கணக்கியல், நிலவியல் பாடங்களுக்கான தேர்வை ஏராளமானோர் எழுதவில்லை.

திண்டுக்கல்லில் 1027 பேர் எழுதவில்லை. இம்மாணவர்களுக்கு நேற்று 8 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்த 16 மாணவர்களில் 13 பேர் தேர்வு எழுதினர். மூன்று பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.சின்னாளபட்டியில் ஒரே மாணவர்சித்தையன்கோட்டை அப்துல்ஹக்கீம் 17, சின்னாளப்பட்டி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். மார்ச் பொது தேர்வின்போது, விபத்தில் சிக்கினார். இடது கை முறிந்ததால் வேதியியல் தேர்வில் பங்கேற்கவில்லை

.ஓரளவு உடல் தேறிய நிலையில், மறுதேர்வை எழுத விருப்பம் தெரிவித்திருந்தார். நேற்றைய தேர்வுக்காக, பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொற்று பரவல் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்,இம்மையத்தில் அப்துல்ஹக்கீம் மட்டும் தேர்வு எழுதினார். வத்தலக்குண்டு மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, முதன்மை கண்காணிப்பாளர் லட்சுமணன் முன்னிலையில் தேர்வு நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X