பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் துவங்க கடனுதவி

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:சொந்த ஊர் திரும்பிய திண்டுக்கல் இளைஞர்களுக்கு கோவிட்-19 சிறப்பு நிதியுதவி வழங்கப்படுகிறது.

தொற்று பாதிப்பு, ஊரடங்கால் நலிவுற்ற தொழில்களுக்கு ஆதரவளிக்க கோவிட்-19 சிறப்பு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் கலெக்டரை தலைவராக கொண்டு, ஆத்துார், வத்தலக்குண்டு, கொடைக்கானல், பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்துார், குஜிலியம்பாறை ஆகிய 7 ஒன்றியங்களில் 148 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்.

வெளியூரில் பணியாற்றி, கொரோனாவால் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள் தொழில் துவங்க ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படும். சுய உதவிக்குழு உறுப்பினர்கள், 18-35 வயது ஆண், 18-40 வயது பெண் பயனடையலாம். விருப்பமுள்ளோர் ஆத்துாருக்கு 90806 23454, வத்தலக்குண்டு 63802 71818, ஒட்டன்சத்திரம் 88071 09510, பழநி 93841 69187, கொடைக்கானல் 96984 87475, வேடசந்துார் 88078 78175, குஜிலியம்பாறை 9943406776ல் பேசலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X