தமிழ்நாடு

தவிப்பு * நிலபுல வரை படத்தை பதிவிறக்க முடியாமல்விவசாயிகள்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் இணையதளத்தில் புல வரைபடம் பதிவிறக்கம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

விவசாய நிலம் தொடர்பான கணினி சிட்டா, புல வரைபடம் போன்றவை தாசில்தார் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது. இதனால் எளிதாக, விவசாயிகள் வங்கியில் கடன் பெற்றும், சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவும் செய்து வந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இணையதளத்தில் இருந்து புல வரைபடம் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பட்டா விவரம் என்பதை தேர்வு செய்து, மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண் உள்ளீடு செய்தால் புல வரைபடம் கணினி திரையில் தோன்றுகிறது. மாவட்டம், கிராமம், புல எண் ஆகிய விவரங்களும் தெரிகிறது. சம்பந்தபட்ட சர்வே எண்ணின் வரைபடம் மட்டும் தெரிவதில்லை. இதனால் புல வரைபடம் பெறுவதற்கு, வி.ஏ.ஓ., அல்லது தாசில்தார் அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது. அங்கு சென்றாலும் புல வரைபடம் கிடைப்பதில்லை என விவசாயிகள் குமுறுகின்றனர்.

அதிகாரிகள் கூறியது:

சர்வரில் புல வரைபடம் பதிவேற்றும் பணி நடக்கிறது. இதனால் சில நாட்களாக இணைய தளத்தில் புல வரைபடம் பதிவிறக்கம் செய்வதில் சிரமம் இருந்தது. இந்த பணிகள் முடிந்ததும் விவசாயிகள் சுலபமாக பதிவிறக்கம் செய்யலாம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X