ஸ்டேஷனை முற்றுகையிடும் மக்கள்கடன் வசூல் கெடுபிடியால்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சின்னாளபட்டி:ஊரடங்கால் கடன் வசூலை தவிர்க்க அரசு அறிவுறுத்தியுள்ள சூழலில், சின்னாளபட்டி பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தினர் அத்துமீறலில் ஈடுபடுவதாக புகார் நீடிக்கிறது.

சின்னாளபட்டி, செம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்களில், இப்பிரச்னைக்காக பொதுமக்கள் முற்றுகையிடும் போக்கு தொடர்கிறது. மகளிர் திட்ட அலுவலர்கள் விசாரணை நடத்தியும், கடன்வசூல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.சிக்கனம்பட்டியில், வசூலுக்கு வந்த சிலர் வட்டியுடன் அசலையும் உடனடியாக செலுத்த வற்புறுத்தினர்.

அவர்களின் அணுகுமுறையால் ஆவேசமடைந்த மக்கள், சின்னாளபட்டி போலீஸ் ஸ்டேஷன் முன்பு திரண்டனர். அங்கிருந்த போலீசார் மாவட்ட குற்றப்பிரிவை அணுகும்படி தட்டிக் கழித்தனர். மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வனஜா தலைமையில், சின்னாளபட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வி பேச்சுவார்த்தை நடத்தியபின் கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X