சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குவாரியை ஏலம் விட கிராமத்தினர் எதிர்ப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு அருகே குவாரியை மறு ஏலம் விடுவதற்கு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மல்லணம்பட்டி ஊராட்சி அழகாபுரி குவாரியை அளவீடு செய்ய தாசில்தார் யூஜின் தலைமையில் வருவாய் துறையினர் வந்தனர். அழகாபுரி கிராமத்தினர் அவர்களிடம், 'குவாரியை சுற்றி 200 மீ., தொலைவுக்கு குளம், விவசாய நிலம், குடியிருப்பு இருந்தால் ஏலம் விடக்கூடாது. இங்கு அனைத்தும் 100 மீ.,க்குள் உள்ளதால் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்' என மனு அளித்தனர். வருவாய்துறைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

அவர்களிடம் தாசில்தார் யூஜின் உங்களது எதிர்ப்பை மாவட்ட கலெக்டருக்கு பதிவு செய்கிறேன் என்றார். சர்வேயர்கள் குவாரியை அளந்தனர். ஊராட்சி சார்பிலும் குவாரியை ஏலம் விடக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X