இந்தியா

கவர்னர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி கவர்னர் மாளிகை அருகில், காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில் காங்., கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ராஜஸ்தானில் ஜனநாயக படுகொலை நடப்பதாக கூறி, நாடு முழுவதும் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள கவர்னர் மாளிகை எதிரில் காங்., கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம், பேரணி போன்ற போராட்டங்களை நடத்தினர்.புதுச்சேரியிலும், கவர்னர் மாளிகையை நோக்கி காங்கிரசார் நேற்று ஊர்வலமாக சென்றனர். அவர்களை, எஸ்.பி., மாறன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.தொடர்ந்து, கவர்னர் மாளிகை அருகில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். அமைப்பு சாரா தொழிலாளர்கள் அணியின் தலைவர் செல்வகணபதி, கருணாநிதி, கண்ணபிரான், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர். காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் கூறும்போது, 'ராஜஸ்தானில் காங்., அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது.சட்டசபையை கூட்டுமாறும், பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் முதல்வர் அசோக் கெலாட் கேட்கிறார். இருந்தபோதும், சட்டசபையை கூட்டுவதற்கு அந்த மாநில கவர்னர் அனுமதி தராமல் உள்ளார். எனவே, ராஜஸ்தானில் நடக்கும் ஜனநாயக படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X