இந்தியா

கமிட்டி; ரவுடிகள் பட்டியலை மறு ஆய்வு செய்ய...டி.ஜி.பி., பாலாஜி ஸ்ரீவத்சவா அதிரடி உத்தரவு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 கமிட்டி; ரவுடிகள் பட்டியலை மறு ஆய்வு செய்ய...டி.ஜி.பி., பாலாஜி ஸ்ரீவத்சவா அதிரடி உத்தரவு

புதுச்சேரி; போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள ரவுடிகள் பட்டியல் மற்றும் குற்றப் பின்னணி பதிவேட்டை மறு ஆய்வு செய்திட எஸ்.எஸ்.பி.,க்கள் தலைமையில் கமிட்டி அமைத்து டி.ஜி.,பி., உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் குற்றப் பின்னணி குறித்த விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.அதிக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்படுபவர்களின் "ஹிஸ்டரி ஷீட்" (History sheet) தொடங்கி, கண்காணிக்கப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே ரவுடி பட்டியலில் சேர்க்கின்றனர். இவ்வாறு புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 700 பேர் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த பட்டியலை, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் ஆண்டுதோறும் புதுப்பிக்காததால், இறந்தவர்கள், ஊரை விட்டு வெளியேறியவர்கள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மனம் திருந்தி வாழ்பவர்களின் பெயர் ரவுடிகள் பட்டியலில் தொடர்கிறது.இதனை அறிந்த டி.ஜி.பி., பாலாஜி ஸ்ரீவத்சவா, போலீஸ் ஸ்டேஷன்களில் பராமரிக்கப்படும் குற்றப்பின்னணி பதிவேடு மற்றும் ரவுடிகள் பட்டியலை மறு ஆய்வு செய்திட கமிட்டி அமைத்து உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி.,க்களை சேர்மனாக கொண்டு தலா மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது.தொடர் குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீது குற்றப் பின்னணி பதிவேடு துவங்கவும், பட்டியலில் இருந்து பெயரை நீக்கவும் எஸ்.பி.,யின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற பழைய முறை தொடர்கிறது.இவ்வாறு தயாரிக்கப்படும் தனி நபர் குற்றப் பின்னணி பதிவேட்டை ஆண்டிற்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும்.

அதில், குற்றப் பின்னணி நபர் இரண்டு ஆண்டிற்கு எந்த வழக்கிலும் ஈடுபடவில்லை எனில், அவரது பெயரை, குற்றப் பின்னணி பதிவேட்டில் இருந்து நீங்கி விடும். இதேபோல் குற்றப் பின்னணி படிவம் தொடர்பாக சில வழிகாட்டுதல் நடைமுறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. போராட்டம், தர்ணா, மறியலில் ஈடுபடுவோர் மீது குற்றப் பின்னணி பதிவேடு துவங்க செயல் நடுவர் ஒப்புதல் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் கோர்ட்டில் வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதற்காக குற்ற பின்னணி பட்டியலில் பெயர் வைத்திருக்க தேவையில்லை. இரண்டு ஆண்டுகளாக எந்த புதிய வழக்கும் பதிவு செய்யவில்லை எனில், ஏற்கனவே செய்துள்ள குற்றத்தின் சந்தேகத்தின் கீழ் கொண்டு வர வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X