இந்தியா

துணை தாசில்தாருக்கு கொரோனா

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

பாகூர்; பாகூர் வட்டாச்சியர் அலுவலக துணை தாசில்தாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுக்க அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், தினமும் பலர் இந்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், பாகூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்த விமலனுக்கு, நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.விமலனுடன், இணைந்து பணியாற்றிய தாசில்தார் (பொறுப்பு) ஸ்ரீஜித் மற்றும் அலுவலர்கள் 7 பேரை, தனிமைப்படுத்தி கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பாகூர் வட்டாச்சியர் அலுவலகம், இரண்டு நாட்கள் மூடப்பட்டு, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலமாக கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. மூடப்படும் நாட்களில் வட்டாச்சியர் அலுவலக பணிகளை மேற்கொள்ளவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X