இந்தியா

மாஜி அமைச்சர் ஜோசப் மரியதாஸ் மரணம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி; உடல் நலக் குறைவால் இறந்த முன்னாள் கல்வி அமைச்சர் ஜோசப் மரியதாஸ் உடல் நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.புதுச்சேரியின் முன்னாள் கல்வி அமைச்சர் ஜோசப் மரியதாஸ்,76; சாரம் வெங்கடேஸ்வரா நகர், முதல் குறுக்கு தெருவில் வசித்து வந்த இவர் உடல் நலக் குறைவால் நேற்று காலை 6,30 மணியளவில் காலமானார். அவரது உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.மாலை 3:00 மணிக்கு இறுதி சடங்கிற்காக ஊர்வலமாக, முத்தியால்பேட்டை செயின்ட் ரோசாரியா ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு நடந்த திருப்பலியில் முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர், மாலை 4:00 மணிக்கு அவரது உடலில் போர்த்தப்பட்ட தேசியக் கொடி அரசு மரியாதையுடன் அகற்றப்பட்டு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் முத்தியால்பேட்டை கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 5.4.1945ம் ஆண்டு பிறந்த இவர், கடந்த 1980ம் ஆண்டு காங்., - தி.மு.க., கூட்டணியில் ராஜ்பவன் தொகு தியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1983 ஆண்டு வரை துணை சபாநாயகராக பதவி வகித்தார்.பின்னர், 1985 காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாரூக் தலைமையிலான அமைச்சரவையில் 1990ம் ஆண்டுவரை கல்வி அமைச்சராக பதவி வகித்தார். அத்துடன் மின்திறன் குழும தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.மனைவி தாரா, மகன் ராஜா இறந்த நிலையில் மகள்கள் ஜூலி, நதாஷா ஆகியோர் ஆதரவில் வசித்து வந்தார்.முன்னாள் அமைச்சர் ஜோசப் மரியதாஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தம் விதமாக அரசு சார்பில் நேற்று ஒரு நாள் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.அதனையொட்டி சட்டசபை, தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X