இந்தியா

வவுச்சர் ஊழியர்கள் 2ம் நாளாக போராட்டம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி; பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் நேற்று அமைச்சர் வீட்டை முற்றுகையிடப் போவதாக பரவிய தகவலின் பேரில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி, பொதுப்பணித்துறையில் பணியாற்றி வரும் வவுச்சர் ஊழியர்கள், தினக்கூலி ஊழியருக்கான பணி ஆணை உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.நேற்று முன்தினம் சுதேசி மில் எதிரே குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, கோரிமேடுசமுதாய நலக்கூடத்திற்கு அழைத்து சென்றனர்.பின்னர் அனைவரையும் போலீசார் விடுவித்தனர். ஊழியர்கள் மறுத்துவிட்டதால், லேசான தடியடி நடத்தி கலைத்தனர். அதில், ஒரு பிரிவினர். மேட்டுப்பாளையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இப்போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்தது.இரண்டாம் நாளான நேற்றும் போராட்டம் தொடர்ந்து. இதற்கு ஆதரவு தெரிவித்து பொதுப்பணித்துறையில் பிற சங்கங்களை சேர்ந்த ஊழியர்களும் பங்கேற்றனர்.இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர் நமச்சிவாயம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தகவல் பரவியது. அதனையொட்டி, அரும்பார்த்தபுரம் மணிவெளியில் உள்ள அமைச்சர் நமச்சிவாயத்தின் வீடு, மற்றும் வீட்டிற்கு செல்லும் பிரதான சாலையில் எஸ்.பி., ரங்கநாதன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.இதற்கிடையே, அமைச்சர் வீடு முற்றுகை வெறும் வதந்தி என தெரிய வந்த பின்னரே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.இந்நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X