இந்தியா

தேசிய மின்னணு சுகாதார செயலாக்க அதிகாரி ஆய்வு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் தேசிய மின்னணு சுகாதார இயக்க திட்ட செயலாக்கம் குறித்து கூடுதல் முதன்மை செயல் அதிகாரி, அமைச்சர், அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தினார். மத்திய அரசு தேசிய மின்னணு சுகாதார இயக்க திட்டத்தின் கீழ் மருத்துவ ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு மாநிலத்தின் கருத்துகளும் கேட்கப்பட்டு வருகிறது.புதுச்சேரி மாநிலத்திலும் இத்திட்டம் செயல்படுத்துவது குறித்து தேசிய மின்னணு சுகாதார இயக்கத்தின் கூடுதல் முதன்மை செயல் அதிகாரி பிரவீன் ஜிடெம் இரு நாட்கள் ஆய்வு செய்தார்.தொடர்ந்து சுகாதார துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ், தலைமை செயலர் அஸ்வனி குமார், கலெக்டர் அருண், சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார், மருத்துவ குழுவினருடன் கலந்தாய்வு நடத்தினார்.தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வால், தகவல் தொழில்நுட்ப குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்திய மருத்துவ சங்க புதுச்சேரி தலைவர் சீனிவாசன், பொருளாளர் ஜான்சன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.தேசிய மின்னணு சுகாதார இயக்க திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், மருத்துவமனைகள், ஆய்வாளர்கள், பொதுமக்களை இணைத்து மருத்துவத்துறைசார்ந்த அனைத்து பரிவர்த்தனை ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது.இதன் மருத்துவ துறை ஆவண பராமரிப்பு ,சேவைகள் அடுத்த கட்டத்திற்கு நகரும். பொதுமக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் எ தேசிய மின்னணு சுகாதார இயக்கத்தின் கூடுதல் முதன்மை செயல் அதிகாரி பிரவீன் ஜிடெம் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X