இந்தியா

ஓ.பி.சி., பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மத்திய அரசு சட்டம் இயற்ற உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி; இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என சிவா எம்.எல்.ஏ., தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சிவா எம்.எல்.ஏ., விடுத்துள்ள அறிக்கை:மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., சீட்களில் 15 சதவீத இடங்களையும், எம்.டி., உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. அதில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்தது.இதனையடுத்து தமிழகத்தில் அந்த இட ஒதுக்கீட்டை பெற தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மேலும் அவரது உத்தரவின்படி புதுச்சேரியில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களில் ஓ.பி.சி., பிரிவுக்கு இட ஒதுக்கீட்டை பெற தி.மு.க., தெற்கு மாநில அமைப்பு சார்பில் நானும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தேன்.அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் மத்திய தொகுப்பில் பெறும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும், இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.இந்த தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தி.மு.க., எப்போதும் சமூக நீதிக்கு போராடும் கட்சி என்பதை இத்தீர்ப்பை கிடைக்கச் செய்து நிருபித்துள்ளார்.அதேசமயம் இத்தீர்ப்பை புதுச்சேரியில் அமல்படுத்துவதற்கு புதுச்சேரி அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இத்தீர்ப்பின் மூலம் ஜிப்மரில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களிலும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X