பொது செய்தி

தமிழ்நாடு

250 மரக்கன்று நடவு துவக்கம்: காலியிடம் பசுமை காடாகும்!

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

திருப்பூர்:கணபதிபாளையம் ராயல் அவென்யூ பகுதியில் உள்ள காலியிடத்தில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 250 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன், மரக்கன்று நடும் பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.



latest tamil news



காலியிடங்களில் பசுமை சூழலை உருவாக்கும் முயற்சியாக, மரக்கன்று நட்டு வளர்ப்பதில், பல்வேறு தரப்பினரும் ஆர்வம் செலுத்துகின்றனர்.
ஆறாவது திட்டத்தின், 15வது நிகழ்ச்சி, திருப்பூர் அருகேயுள்ள கணபதிபாளையத்தில் நேற்று நடந்தது. ராயல் அவென்யூவில் உள்ள காலியிடங்களில், 250 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.


latest tamil news



கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி, முன்னாள் தலைவர் சோமசுந்தரம், ராயல் அவென்யூ குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், வேர்கள்' அமைப்பு நிர்வாகிகள், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பசுமையை பரப்பும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவர்கள், 90470 86666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூலை-202015:38:34 IST Report Abuse
babu இருக்கிற காட்டை அழிக்க காண்டிராக்ட் கொடுத்திட்டு பாலைவனத்தில நாலு செடி நட்டு படம் காட்டுவாங்களாம். இருக்கற மலையை வெட்டி வித்திட்டு கடல் நீரை குடிநீராக்கும் மாபெரும் திட்டம், மாபெரும் வேலைவாய்ப்புகள்னு படம் காட்டுவாங்களாம். சொந்த நாட்டை பணத்திற்காக அழிப்பவன் தேசபக்தனாம். தடுப்பவன் தேசவிரோதியாம்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
28-ஜூலை-202008:40:27 IST Report Abuse
Bhaskaran கொங்குமக்கள் அதனை சாதிப்பார்கள் சென்னைவாசிகள் இருக்கும் மரத்தை வெட்டுவார்கள்
Rate this:
Cancel
Kavi - Karur,இந்தியா
28-ஜூலை-202006:38:57 IST Report Abuse
Kavi ரொம்ப நல்ல விஷயம். இயற்கையே இறைவன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X