250 மரக்கன்று நடவு துவக்கம்: காலியிடம் பசுமை காடாகும்!| 250 saplings planted in Tirupur | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

250 மரக்கன்று நடவு துவக்கம்: காலியிடம் பசுமை காடாகும்!

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (4)
Share

திருப்பூர்:கணபதிபாளையம் ராயல் அவென்யூ பகுதியில் உள்ள காலியிடத்தில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 250 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன், மரக்கன்று நடும் பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.



latest tamil news



காலியிடங்களில் பசுமை சூழலை உருவாக்கும் முயற்சியாக, மரக்கன்று நட்டு வளர்ப்பதில், பல்வேறு தரப்பினரும் ஆர்வம் செலுத்துகின்றனர்.
ஆறாவது திட்டத்தின், 15வது நிகழ்ச்சி, திருப்பூர் அருகேயுள்ள கணபதிபாளையத்தில் நேற்று நடந்தது. ராயல் அவென்யூவில் உள்ள காலியிடங்களில், 250 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.


latest tamil news



கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி, முன்னாள் தலைவர் சோமசுந்தரம், ராயல் அவென்யூ குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், வேர்கள்' அமைப்பு நிர்வாகிகள், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பசுமையை பரப்பும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவர்கள், 90470 86666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X