பொது செய்தி

தமிழ்நாடு

'நவம்பரில் கொரோனா முடிவுக்கு வரும்'

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கோவை:''கொரோனா நோய் ருத்ரதாண்டவம் வரும் நவம்பர் மாத இறுதி வாரத்தில் முடிவுக்கு வரும்,'' என, ஸ்ரீமத் அகோபில மடத்தின் ஆஸ்தான வித்வான் ராஜகோபாலன் கூறினார்.கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மகரிஷிகள் காலத்தில், தர்மயுகத்தில் இதே போன்ற தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. தற்போது கலியின் தோஷத்தால் மக்களிடம் உள்ள உணவு பழக்க வழக்கங்களில் அதீத மாற்றம் ஏற்பட்டது.யாருக்கும் தீங்கிழைக்காத சாதுவான பறவைகள் கொல்லப்பட்டு, உணவாக மனிதர்களால் உட்கொள்ளப்பட்டன.தர்மம் பிறழ்ந்து போனதால் தான் கொரோனா உருவானது. ஜோதிட ரீதியாக, நவம்பர் கடைசி வாரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலக மக்கள் விடுபடுவர். அப்போது சூரியன் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயருகிறார்.தியானம், பிரணாயாமம் போன்ற உடல் மற்றும் மூச்சுப்பயிற்சி, உடலில் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் உணவுகளை உட்கொள்வதின் வாயிலாக நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.இவ்வாறு ராஜகோபாலன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X