பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் இதுவரை 2,112 பேர் டிஸ்சார்ஜ்: குணமடைவோர் விகிதம் அதிகரிப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கைக்கு ஏற்ப குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை 2,112 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.பெரியநாயக்கன்பாளையம் மற்றும் கோவை மத்திய தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வரும்,மூன்று வீரருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் உட்பட அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த, 12 பேர்; கோவை அரசு மருத்துவமனை பெண் ஊழியர்கள் இருவர், வெள்ளலூர் அதிவிரைவு அதிரடிபடையை சேர்ந்த, 4 பேர் உட்பட மொத்தம், 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 3,775 ஆக உயர்ந்தது.மூவர் பலிதுடியலுார் லவ்லி நகரை சேர்ந்த, 80 வயது முதியவர், சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்த, 96 வயது முதியவர், மரக்கடை டி.கே., வீதியை சேர்ந்த, 70 வயது முதியவர் என, மூவர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 61ஆனது.202 பேர் டிஸ்சார்ஜ்கொரோனா குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கைய அதிகரித்து வருகிறது. கோவை இ.எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த, 202 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். தொற்றுக்குள்ளான, 3,775 பேரில், 2,112 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 1,602 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X