சீனா அருகே போர் விமானங்களை பறக்க விட்டு அமெரிக்கா அதிரடி

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
பீஜிங்;சீனாவின், ஷாங்காய் நகருக்கு மிக அருகே, இரண்டு போர் விமானங்களை, அமெரிக்கா பறக்கவிட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உலகம் முழுதும், கொரோனா தொற்று பரவத்துவங்கிய பின், அமெரிக்கா - சீனா இடையே, மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தின், ஹூஸ்டன் நகரில் உள்ள, சீன துாதரகத்தை, கடந்த சில நாட்களுக்கு முன், அமெரிக்கா அதிரடியாக மூடியது. இதற்கு பதிலடியாக,

பீஜிங்;சீனாவின், ஷாங்காய் நகருக்கு மிக அருகே, இரண்டு போர் விமானங்களை, அமெரிக்கா பறக்கவிட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுதும், கொரோனா தொற்று பரவத்துவங்கிய பின், அமெரிக்கா - சீனா இடையே, மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தின், ஹூஸ்டன் நகரில் உள்ள, சீன துாதரகத்தை, கடந்த சில நாட்களுக்கு முன், அமெரிக்கா அதிரடியாக மூடியது. இதற்கு பதிலடியாக, சீனாவின் செங்டு நகரில் உள்ள, அமெரிக்க துாதரகத்தை, சீனா மூடியது.latest tamil newsஇந்நிலையில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான, 'பி - 8ஏ' மற்றும் 'இ.பி. - 3இ' ஆகிய, இரண்டு போர் விமானங்கள், கிழக்காசிய நாடான, தைவான் கடல் பகுதியில் இருந்து, சீனாவின் ஸேஜியாங் மற்றும் புஜியான் கடல் பகுதிக்குள், நேற்று முன் தினம் நுழைந்தது.


latest tamil newsசீன வர்த்தக தலைநகராக கருதப்படும், ஷாங்காய் நகரில் இருந்து, 76 கி.மீ., தொலைவில், இந்த விமானங்கள் பறந்தன. 'சீன நகருக்கு மிக அருகே, அமெரிக்க போர் விமானங்கள் பறந்தது, இதுவே முதல் முறை' என, கூறப்படுகிறது.இதுகுறித்து, ஹாங்காங்கை சேர்ந்த, ஊடகங்கள், செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sambandam.s - Thanjavur,இந்தியா
28-ஜூலை-202017:50:13 IST Report Abuse
sambandam.s Nearly more than 1.75 lakhs innocent souls were forced to leave the world, still the effect of the pandemic has not come to an end
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
28-ஜூலை-202014:24:49 IST Report Abuse
Vena Suna இந்தியாவும் நான்கு போர் விமானங்களை பாகிஸ்தான் அருகே 'வேடிக்கை' காண்பித்து 'அன்பை' வெளிப்படுத்தலாம்.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
28-ஜூலை-202012:59:41 IST Report Abuse
vnatarajan சீன கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா.. .அதன் தாக்கத்தை முன்கூட்டியே உலக நாடுகளுக்கு தெரிவிக்காமல் உலக சுகாதார அமைப்பும் சைனாவும் மறைத்துவிட்டதென்றும் அதனால் சீனா அதற்கு வேண்டிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று டிரம்ப் மிரட்டியிருக்கிறார். அதன் முகத்தால் அடியாக தற்போது அமெரிக்கா சீன நகருக்கு மிக அருகாமையில் தன்னுடைய போர் விமானத்தை பறக்கவிட்டிருக்கிறது. அடுத்த ஸ்டேப் மிக மோசமாக இருக்கும் என்று தோன்றுகிறது. .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X