பொது செய்தி

தமிழ்நாடு

'பல்ஸ் ஆக்சிமீட்டர்' வாங்க பொதுமக்கள் ஆர்வம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:உடலில் ஆக்சிஜன் அளவைத் துல்லியமாக காட்டும், 'பல்ஸ் ஆக்சி மீட்டரை' வீடுகளில் வாங்கி வைத்து பொதுமக்கள் பலர் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.கொரோனா தொற்று, நுரையீரலைத் தாக்குகிறது. நுரையீரல் பாதிப்பை, மருத்துவ சோதனையில் கண்டறிய முடியும். மருத்துவமனைக்கு வராமலேயே, 'பல்ஸ் ஆக்சிமீட்டர்' கருவியால், கண்டறிவது எளிதானது என்கின்றனர், சுகாதாரத்துறையினர்.சுகாதாரத் துறையினர் கூறியதாவது:உடல் திசுக்களில், ஆக்சிஜன் அளவு கடும் வீழ்ச்சி அடைவதை 'சைலன்ட் ஹைபோக்சியா' என்று அழைக்கின்றனர். இக்கட்டத்தை அடைவதற்கு முன்பே, இதைக் கண்டறிய, இக்கருவி உதவுகிறது.உள்ளங்கைக்குள் அடங்கிவிடக்கூடிய இக்கருவியை மோதிர விரல் அல்லது சுண்டு விரலில் மாட்டினால் போதுமானது.சுவாசப்பாதையில் செல்லும், ஆக்சிஜன் அளவை துல்லியமாகக் காட்டும். உடலில் 95 சதவீதத்துக்கு கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்தால், மூச்சுத்திணறல் துவங்கும். மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை தர வேண்டும். 1,000 ரூபாய்க்கு 'பல்ஸ் ஆக்சிமீட்டர்' கிடைக்கிறது. பல வீடுகளில், இக்கருவியைச் சொந்தமாக வாங்கி வைத்துக்கொள்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X