சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டி கொலை;பேரன் கைது

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கோவை:மூதாட்டியை குத்தி கொன்றது தொடர்பாக பேரன் கைது செய்யப்பட்டார்.கோவை, ஆவாராம்பாளையம், மட்டசாலை வீதியில் வசித்து வந்தவர் கன்னியம்மாள்.70. இவரது மகள் துளசிமணிக்கு, கார்த்திக், 25, என்ற மகன், ஒரு மகள் உள்ளனர். கார்த்திக், தங்கை கணவர் தர்மராஜ், 27, ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம்.நேற்று முன்தினம் இரவு, பாட்டி கன்னியம்மாளின் வீட்டில் வைத்து, இருவரும் மது குடித்து கொண்டிருந்தனர்.குடிபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கார்த்திக், கண்ணாடியால் தர்மராஜை அடிக்க முயன்றார்.இதை கன்னியம்மாள் தடுக்க முயன்றபோது, அவரது கழுத்தில் கண்ணாடி குத்தியது. படுகாயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் இறந்தார்.பீளமேடு போலீசார், கார்த்திக்கை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X