பொது செய்தி

தமிழ்நாடு

கோர்ட் உத்தரவை மீறும் தனியார் மையங்கள் 'கூட்டு திட்டத்தால்' கல்வியாளர்கள் அதிர்ச்சி

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கோவை : உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, கல்லுாரி போன்று, 'ரெகுலர்' முறையில் சில தனியார் மையங்கள் மாணவர்களை சேர்த்து வருவது, கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலை, தன் எல்லையை தாண்டி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் மையங்களுக்கு, 'கொலபிரேட்டிவ் புரோகிராம்ஸ்' - கூட்டு திட்டம் - என்ற பெயரில் அனுமதி வழங்கியுள்ளது.குற்றச்சாட்டு'இது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும், பல்கலை மானியக்குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அப்பட்டமாக மீறும் செயல்' என்ற குற்றச்சாட்டு, கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த தனியார் மையங்கள், விதிமுறைகளை மீறி, இன்ஜினியரிங், மருத்துவம், கேட்டரிங், விமானப் பாடப்பிரிவுகள் போன்ற, 'புரொபஷனல்' படிப்புகளையும் நடத்துவதாகவும், உரிய கட்டமைப்பு, தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் போன்ற வசதிகளும் கிடையாது என்பதும், இவர்களது குற்றச்சாட்டாக உள்ளது.கல்லுாரிகுறிப்பாக, கோவை - பாலக்காடு சாலை, கோவைப்புதுாரில், 'கஸ்துாரி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்' என்ற மையம், அழகப்பா பல்கலையுடன் ஒப்பந்தம் செய்து, ரெகுலர் முறையில், கல்லுாரி போல் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த மையத்தின் பாடப்பிரிவு இயக்குனர் சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது, ''யு.ஜி.சி., வழிமுறைகளை பின்பற்றி தான், பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. எங்களிடம் கல்லுாரி கட்டமைப்புகள் உள்ளன. ''பாடப்பிரிவுகள் குறித்து, நோட்டீசில் என்ன தெரிவித்து உள்ளோமோ, அதை தான் பின்பற்றுகிறோம். இதற்கு மேல் வேறு எதுவும் தெரிவிக்க முடியாது,'' என்றார். முன்னாள் பேராசிரியர் மற்றும் கல்வியாளர் பிச்சாண்டி கூறுகையில், ''தொலைதுார கல்வி முறையின் ஒரு பிரிவு தான், இந்த கொலபிரேட்டிவ் புரோகிராம் என்பது. அழகப்பா பல்கலை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தான் நடத்த முடியும்.''கோவை போன்ற பகுதிகளில் நடத்த அனுமதியில்லை. இதுதொடர்பாக பாரதியார் பல்கலை வழக்கில், கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X