சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொற்று பரிசோதனைக்கு 'டிமிக்கி' 'இ - பாஸ்' பயணியர் தில்லுமுல்லு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சேலம், : -'இ - பாஸ்' பெற்று செல்லும் பலர், தொற்று பரிசோதனைக்கு பயந்து, தில்லுமுல்லு செய்து வருகின்றனர்.தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.

மாவட்டம் விட்டு, மாவட்டம் செல்வோர், 'இ - பாஸ்' பெற்று செல்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. மாவட்டத்துக்குள் வரும் பயணியரை, எல்லையில் நிறுத்தி, கொரோனா பரிசோதனை நடத்தி, முடிவுகள் வெளிவந்த பிறகே, அனுமதிக்கப்படுகின்றனர்.2,000 ரூபாய் கட்டணம்வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பயணியரால், கொரோனா பரவலை தடுக்க, இந்த நடவடிக்கைகள் உதவியாக உள்ளன. சமீப காலமாக, இ - பாஸ் பெற்றுத்தரும் இடைத்தரகர்களின் எண்ணிக்கை, அதிகரித்துள்ளது.

இவர்கள், இ - பாஸ் பெற்றுத்தர 2,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கெடுபிடிகளில் இருந்து தப்பிக்கவும், வழிகளை கற்றுக் கொடுக்கின்றனர். இதன்படி, பெரும்பாலானோர் உண்மையாக செல்ல வேண்டிய மாவட்டத்துக்கு, இ - பாஸ் எடுக்காமல், சேரும் மாவட்டத்திற்கு, அடுத்துள்ள மாவட்டத்துக்கு செல்வதாக அனுமதி பெறுகின்றனர்.உதாரணமாக, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, சேலம் மாவட்டத்துக்கு வர வேண்டிய பயணியர், ஈரோடு வரை, இ - பாஸ் எடுக்கின்றனர்.

ஈரோடு செல்லும் பயணியர் தானே என, சேலம் மாவட்ட எல்லையில் உள்ள அதிகாரிகள், பரிசோதனை மேற்கொள்ளாமல் அனுமதித்து விடுகின்றனர். தொற்று பரவல்பயணியர் ஈரோடு செல்லாமல், சேலம் மாவட்டத்தில், தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று விடுகின்றனர். இவர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருக்கும் சூழலில், இவர்கள் செல்லும் இடங்களிலும் தொற்று பரவி விடுகிறது.இ - பாஸ் பெறுபவர்கள், ஆதார் எண், தொலைபேசி எண் வாயிலாகவே விண்ணப்பிக்கின்றனர். இவர்கள் உரிய மாவட்டத்துக்குள் வராத போது, அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற தில்லுமுல்லுகளை தடுக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X