ஆட்சி கவிழப் போகிறதா?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

ஆட்சி கவிழப் போகிறதா?

Added : ஜூலை 28, 2020
Share
 ஆட்சி கவிழப் போகிறதா?

'அடுத்த குறி எனக்குத் தானா...' என, குளிர் ஜுரம் வந்த நோயாளி போல நடுங்குகிறார், ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன். இங்கு கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, 29 இடங்களில் வென்றது. காங்கிரசைச் சேர்ந்த, 17 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த ஹேமந்த் சோரன், முதல்வராக பதவியேற்றார். காங்கிரசும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கிறது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து, பா.ஜ., ஆட்சி அமைந்தது. அதைத் தொடர்ந்து, தற்போது ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி ஊசலாடுகிறது. அடுத்ததாக, சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு, 'ஆப்பு' அடித்து விட்டு, அதற்கு பின், ஜார்க்கண்டையும் ஒரு கை பார்க்க, பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. துவக்கத்தில், ஹேமந்த் சோரன், இதை நம்பவில்லை. 'என் தலைமையிலான ஆட்சி, இரும்புக் கோட்டையாக உள்ளது. பா.ஜ.,வால் தகர்க்க முடியாது' என, ஆவேசத்துடன் கூறி வந்தார்.

ஆனால், ஜார்க்கண்ட் நிதி அமைச்சரும், அந்த மாநில காங்கிரஸ் தலைவருமான ராமேஷ்வர் ஓரன், 'காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் இழுக்க, பா.ஜ., தலைவர்கள் பேரம் பேசுகின்றனர்' என, சமீபத்தில் தெரிவித்தார். இதற்கு பின் தான், ஹேமந்த் சோரனுக்கு நடுக்கம் ஏற்பட்டது. 'உண்மையிலேயே, என் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கப் போகின்றனரா... வதந்தி என அலட்சியமாக இருந்து விட்டேனே... இப்போது என்ன செய்வது...' என, தவியாய் தவிக்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X