பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
இதே நாளில் அன்று


ஜூலை, 28, 1907


சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், 1907 ஜூலை, 28ம் தேதி, ஆவிச்சி செட்டியாருக்கு மகனாக பிறந்தவர், ஏ.வி.மெய்யப்ப செட்டியார். 1935ல், திரைப்பட தயாரிப்பில் இறங்கியவர், ஆரம்பத்தில் சில தோல்விகளை சந்தித்து, பின் வெற்றி கண்டார்.

நண்பர்களுடன் இணைந்து, 'பிரகதி ஸ்டுடியோ' எனும் நிறுவனத்தை துவக்கி, சபாபதி, ஸ்ரீவள்ளி போன்ற படங்களை தயாரித்தார். பின், 1945ம் ஆண்டு, ஏ.வி.எம்., நிறுவனத்தைத் துவக்கி, வாழ்க்கை, பராசக்தி, அன்பே வா உள்ளிட்ட படங்களை தயாரித்து, தமிழில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கினார்.


latest tamil news


தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து, வெற்றி கண்டார். தமிழ்த் திரையுலகில், 75 ஆண்டுகளாக, ஏ.வி.எம்., நிறுவனம் நிலைத்து நிற்பதற்கு, அவர் அமைத்துக் கொடுத்த அடித்தளம் தான், காரணம். 1979 ஆக., 12ம் தேதி காலமானார்.

ஏ.வி.மெய்யப்ப செட்டியார் பிறந்த தினம் இன்று!

மேலும் ஏவிஎம்.,மை பற்றிய பல தகவல்கள் மற்றும் போட்டோக்களுக்கு https://cinema.dinamalar.com/avm/ என்ற முகவரியை கிளிக் செய்யவும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
28-ஜூலை-202015:27:38 IST Report Abuse
M.COM.N.K.K. ஏவிஎம் தயாரிப்பில் எத்தனையோ திரைப்படம் வந்திருந்தாலும் எனது மனதை கொள்ளைகொண்ட படம் மக்கள்திலகம் நடித்த அன்பே வா ஆகா அற்புதம் ஏ வி மெய்யப்ப செட்டியார் அவர்கள் புகழ் இப்புவியில் நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறோம்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
28-ஜூலை-202013:11:56 IST Report Abuse
Bhaskaran ஒரு திரைபடத்தை எடுத்துமுடித்தவுடன் ரஷ் பார்க்கும் பொது கதாநாயகியின் ரவிக்கை வியர்வை நனைந்து தெரிந்ததால் மீண்டும் அந்த காட்சியை படமாக்கினார் .அந்த அளவுக்கு கூட திரைப்படத்தில் ஆபாசம் இருக்கக்கூடாது என்றுநினைத்தவர் மெய்யப்பன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X