சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்: செப்., 29ல் டிரம்ப், ஜோபிடன் நேருக்கு நேர் விவாதம்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
US presidential elections, 2020 elections, donald Trump

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர்களின் நேருக்கு நேர் விவாதம் செப். 29-ம் தேதி முதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

அமெரிக்க அதிபராக உள்ள டெனால்டு டிரம்ப் பதவி காலம் நிறைவடைய உள்ளது. கொரோனா பரவல் அமெரிக்காவில் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், நாட்டின் அடுத்த அதிபரை தேர்வு செய்ய அமெரிக்கர்கள் தயாராகி வருகின்றனர். தற்போது குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் களமிறங்குகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடன் போட்டியிடுகிறார்.


latest tamil news





மூன்று விவாதங்கள்



தேர்தலையொட்டி அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம் நடத்தப்பட உள்ளது. இதற்காக இருவரும் நடத்தும் முதல் விவாதம் செப்டம்பர் 29-ம் தேதி ஒஹிகோ மாகாணத்தில் க்ளைவ் லாண்டிலும், அக்.15-ம் தேதி, புளோரிடாவிலும், ,அக்.22-ம் தேதி டென்னிசி மாகாணத்திலும், என மொத்தம் மூன்று விவாதங்கள் நடக்கிறது.

இந்த விவாதத்தில் முதன்முறையாக டிரம்ப், ஜோபிடன் ஆகியோர் நேருக்கு நேராக சந்தித்து விவாதிக்கின்றனர். தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளி்ட்ட பல்வேறு திட்டங்களில் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்குகின்றனர்.

இந்நிலையில் துணை அதிபருக்கான விவாதம் அக்.7-ம் தேதி துவங்குகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகளில், அதிக சதவீத வாக்குகள் பெற்றவரே அமெரி்க்காவின் அடுத்த அதிபராக அறிவிக்கப்படுவார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sekar - madurai,இந்தியா
28-ஜூலை-202016:15:31 IST Report Abuse
sekar அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதி திரு .டிரம்ப் அவர்கள்தான் என எல்லா அமெரிக்க ஊடகங்களும் எழுதுகின்றன ,இவரால் வேலை மற்றும் படிப்பை இழந்த இந்தியர்கள் ஏராளம் மேலும் இவர் இந்த முறை தலை கீழாக நின்றாலும் வெல்ல முடியாது என்பது எதார்த்தமான உண்மை ,திரு மோடி அவர்கள் இவருக்கு மரியாதை தருவது இவரது பதவிக்கு தானே தவிர இவருக்கு இல்லை என்பதை உணர்ந்து இங்குள்ளவர்கள் கருத்து பதிவிடுவது நல்லது
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-ஜூலை-202014:11:08 IST Report Abuse
Natarajan Ramanathan ஜோ பைடன் என்பதே சரியான உச்சரிப்பு.
Rate this:
Cancel
28-ஜூலை-202013:01:54 IST Report Abuse
நக்கல் இந்த முறை டிரம்ப் வெற்றி பெறுவதுதான் உலகிற்கு, முக்கியமாக இந்தியாவிற்கு நல்லது... இந்தியாவிலும் இதே போல் ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்தும் முறை வரவேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X