பொது செய்தி

இந்தியா

ராமர் கோயிலில் 2000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் 'டைம் கேப்சூல்'

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
அயோத்தி: ராமர் கோயில் ராம ஜென்ம பூமி வரலாறு பற்றி எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு அடியில் 2000 அடி ஆழத்தில் 'டைம் கேப்சூல்' புதைக்கப்படும் என ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது.டைம் கேப்சூல் புதைக்கப்படுவதால் எதிர்காலத்தில் ராம ஜென்ம பூமி குறித்து எந்தவித சர்ச்சையும்
Ram Temple, Time Capsule, Ayodhya, ராமர், கோயில், அயோத்தி, டைம் கேப்சூல், புதைக்கப்படுகிறது

அயோத்தி: ராமர் கோயில் ராம ஜென்ம பூமி வரலாறு பற்றி எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு அடியில் 2000 அடி ஆழத்தில் 'டைம் கேப்சூல்' புதைக்கப்படும் என ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது.

டைம் கேப்சூல் புதைக்கப்படுவதால் எதிர்காலத்தில் ராம ஜென்ம பூமி குறித்து எந்தவித சர்ச்சையும் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது. முக்கியமான தகவல்களை எதிர்காலத் தேவைக்காக பாதுகாப்பதே டைம் கேப்சூல். தற்கால நிகழ்வுகள் தகவல்கள் வரலாற்று குறிப்புகள் ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை எதிர்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் எளிதில் உடையாத வலிமையான குடுவைக்குள் வைத்து புதைத்து விடுவார்கள். இதன் மூலம் நிகழ்கால தகவல்களை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள முடியும்.


latest tamil news


2019ல் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதித்து மூன்று மாதத்திற்குள் கோயில் கட்டுவதற்குரிய அறக்கட்டளையையும் மத்திய அரசு அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு ஏற்படுத்தியது. அயோத்தியில் ஆக., 5ம் தேதி பூமி பூஜை நடக்கிறது.


latest tamil news


அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் கூறுகையில், ''அயோத்தி வழக்கில் நடந்த சட்டப் போராட்ட நிகழ்வுகளை எதிர்கால சந்ததியினரும் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் கோயிலுக்கு அடியில் 2000 அடி ஆழத்தில் ராமர் கோயில் பற்றிய தகவல்கள் அடங்கிய டைம் கேப்சூலை வைக்கப் போகிறோம். கோவில் கட்டுமானத்துக்காக பல்வேறு புனிதமான இடங்களில் இருந்தும் மண் கொண்டுவரப்படும். மேலும் ராமர் தன் வாழ்க்கை பயணத்தின் போது சந்தித்த நதிகளில் இருந்தும் புனித நீர் கொண்டுவரப்பட்டு பூஜைக்கு பயன்படுத்தப்படும்'' என தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
28-ஜூலை-202019:39:32 IST Report Abuse
Bhaskaran நெருக்கடி நிலைக்காலத்தில் காங்கிரஸ் கட்சி இம்மாதிரி ஒருபெட்டகத்தை பூமியில் புதைத்துவைத்தது பின் ஜனதா ஆட்சிக்காலத்தில் தோண்டி எடுத்துப்பார்த்ததில் அதில் இருந்த தகவல் .வெள்ளையர்களிடம் ஜவஹர்லால் நேரு போராடி சுதந்திரம் பெற்றார் அந்த சமயத்தில் காந்தி என்பவர் நேருவுக்கு கொஞ்சம் உதவிகள் செய்தார் .என்பதாகும்
Rate this:
Cancel
OUTSPOKEN - CHENNAI,இந்தியா
28-ஜூலை-202018:06:51 IST Report Abuse
OUTSPOKEN இனி வரும் அழிவில் எதுவும் மிஞ்சாது
Rate this:
Cancel
Ramesh - Bangalore,இந்தியா
28-ஜூலை-202013:54:13 IST Report Abuse
Ramesh இது முக்கியமான விஷயம் ...இல்லாவிடில் நேரு - இந்திரா - ராஜிவ் - ராகுல் etc. போன்றவர்கள் இந்துக்கள் என்று கடைசி 60+ வருடங்களை பொய் கூறுவது போல் இந்தியா முஸ்லீம் நாடு , கிறிஸ்து இங்கே தான் பிறந்தார் , திமுக குடும்பம் ஊழலற்ற குடும்பம் etc. போன்ற பொய்களை mulsim + Christian + காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் + திமுக போன்ற கூட்டம் பொய் ஏய் உண்மையாக்கிவிடும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X