ராஜஸ்தான் விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும்: சிதம்பரம் வலியுறுத்தல்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement
Chidambaram, Rajasthan, President ram nath kovind, சிதம்பரம், ராஜஸ்தான், விவகாரம், ஜனாதிபதி, தலையிடவேண்டும்

புதுடில்லி: ராஜஸ்தான் சட்டசபையைக் கூட்ட அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், தற்போதைய எம்பி.,யுமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக காணொலி மூலம் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ப.சிதம்பரம் கூறியதாவது: பா.ஜ., சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் அரசியலமைப்பு சட்டத்தை மீறி வருகிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபையைக் கூட்டுவது தொடர்பாக ஜனாதிபதி தலையிட்டு, பார்லிமென்ட் ஜனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையுள்ளது.


latest tamil news


ராஜஸ்தான் கவர்னரின் நடவடிக்கை தவறு என சுட்டிக்காட்டி உடனடியாக சட்டசபையைக் கூட்ட கவர்னருக்கு அறிவுறுத்த ஜனாதிபதிக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆட்சியில் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையை கூட்டுமாறு முதல்வர் கோருகிறார் எனில் அதை கவர்னர் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

இந்த விவகாரத்தில் கவர்னருக்கு என தனி அதிகாரம் எதுவும் இல்லை. சட்டசபையைக் கூட்டாமல் தடையை ஏற்படுத்துவது என்பது பார்லிமென்ட் ஜனநாயகத்தைக் குறைந்து மதிப்படுவதற்கு சமமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
28-ஜூலை-202020:32:20 IST Report Abuse
elakkumanan அது எப்புடீன்னு தெரியல .......................ரொம்ப யோக்கியன் மாதிரியே பேசுறதுக்கு நடிக்கிறதுக்கு உங்களுக்கு நல்லா வருது. ............... .............. பக்கத்துக்கு புண்ணிய தேசத்துல போயி தீவிரவாத பயிற்சி எடுத்துட்டு வந்த ஒரு அம்மணியை (அப்போ உங்களோட மத்திய அரசு கொடுத்த உளவு அறிக்கையை மேற்கொண்டு ) என்கொண்டேர் பண்ணுனதுக்கு, என்னவோ நீஙயெல்லாம் மோடியையும் அமித் ஷா அவர்களையும் ஏன்னா பாடு படுத்தின ............. ...............எம்பூட்டு அசிங்கப்படுத்தின ................ ...................அப்போ, இந்த சட்டம், சனநாயகம், சனாதிபதி (அப்போ ஒரு 'பெரிய' மனுசி இருந்துச்சு) இதெல்லாம் தெரியலையே ............. ...............கப்பா கப்பா உலக மகா நடிப்புடா சாமி........... ..............ஐயோ ராமா என்னை ஏன் இந்த மாதிரி ஆட்களோடெல்லாம் சேர்ந்து இருக்க விடுற.......... .................. கெளம்பு.................ஒனக்கு நேரம் வந்தாச்சு....... ....................... உண்மையை மட்டுமே பேசுறவன மாதிரியே அந்த மைக் முன்னால பேசுறது. ............. உனக்கு நல்லா வருது யா ................................ உண்மையை சொல்லித்தானே ஆகணும்.................................
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
28-ஜூலை-202018:35:14 IST Report Abuse
RajanRajan அதெல்லாம் ஓண்ணும் முடியாதுப்பா. நீ போயி ஜீங் பிங்ன் இம்ரன் கோஷ்டிய பார்த்து முறையீடு முறைவாசல் பண்ணு..
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
28-ஜூலை-202017:17:54 IST Report Abuse
M.COM.N.K.K. போனால் போகட்டும் போடா இனி எந்த மாநிலத்திலும் நிலையாய் ஆட்சி செய்ய போகிறவர் யாரடா போனால் போகட்டும் போடா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X