ராஜஸ்தான் விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும்: சிதம்பரம் வலியுறுத்தல்| Hope President will intervene, instruct Rajasthan governor to convene Assembly session: Chidambaram | Dinamalar

ராஜஸ்தான் விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும்: சிதம்பரம் வலியுறுத்தல்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (42)
Share
புதுடில்லி: ராஜஸ்தான் சட்டசபையைக் கூட்ட அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், தற்போதைய எம்பி.,யுமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக காணொலி மூலம் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ப.சிதம்பரம் கூறியதாவது: பா.ஜ., சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் அரசியலமைப்பு சட்டத்தை மீறி
Chidambaram, Rajasthan, President ram nath kovind, சிதம்பரம், ராஜஸ்தான், விவகாரம், ஜனாதிபதி, தலையிடவேண்டும்

புதுடில்லி: ராஜஸ்தான் சட்டசபையைக் கூட்ட அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், தற்போதைய எம்பி.,யுமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக காணொலி மூலம் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ப.சிதம்பரம் கூறியதாவது: பா.ஜ., சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் அரசியலமைப்பு சட்டத்தை மீறி வருகிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபையைக் கூட்டுவது தொடர்பாக ஜனாதிபதி தலையிட்டு, பார்லிமென்ட் ஜனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையுள்ளது.


latest tamil news


ராஜஸ்தான் கவர்னரின் நடவடிக்கை தவறு என சுட்டிக்காட்டி உடனடியாக சட்டசபையைக் கூட்ட கவர்னருக்கு அறிவுறுத்த ஜனாதிபதிக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆட்சியில் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையை கூட்டுமாறு முதல்வர் கோருகிறார் எனில் அதை கவர்னர் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

இந்த விவகாரத்தில் கவர்னருக்கு என தனி அதிகாரம் எதுவும் இல்லை. சட்டசபையைக் கூட்டாமல் தடையை ஏற்படுத்துவது என்பது பார்லிமென்ட் ஜனநாயகத்தைக் குறைந்து மதிப்படுவதற்கு சமமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X