கொரோனா தடுப்பில் பெண் தலைவர்கள் 'சூப்பர்'

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
coronavirus, covid 19, corona, female leaders, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, பெண், ஆண், தலைவர்கள், பெண் தலைவர்கள், ஆண் தலைவர்கள்

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் ஆண் தலைவர்களை விட பெண் தலைவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்தின் டிரினிட்டி கல்லூரி சார்பில் நிபுணர்கள், உலகில் ஐந்து கண்டங்களில் உள்ள 35 நாடுகளில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்து ஆய்வு நடத்தினர். இதில், 10 நாடுகள் பெண்கள் ஆட்சி நடத்துபவை. ஆய்வு முடிவில் ஆண்களை விட பெண்கள் ஆறும் நாடுகள், கொரோனா பரவலை கட்டுப்படுததுவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், உயிரிழப்பை கட்டுப்படுத்தியதில், பெண்கள் ஆட்சி செய்யும், ஜெர்மனி, நியூசிலாந்து, டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. பெண்கள் ஆட்சியில் உள்ளநாடுகளை விட, ஆண்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகம். பெண் தலைவர்களின் நாடுகளின் மொத்த மக்கள் தொகையின்படி, 10 லட்சம் பேருக்கு சராசரி உயிரிழப்பு எண்ணிக்கை 4.8 ஆக உள்ளது. ஆண் தலைவர்கள் நாடுகளில் 21 ஆக உள்ளது.

அதேபோல பெண் தலைவர்கள், ஆண் தலைவர்களை விட தங்கள் நாடுகளில் கொரோனா தொற்றின் உச்சத்தை மிக விரைவில் குறைத்தனர். தினசரி இறப்பு எண்ணிக்கையும் குறைத்து சாதித்துள்ளனர். மேலும் இந்த நாடுகள் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளை விட மிக ஆரம்பத்திலேயே விட மிக ஆரம்பமாக ஊரடங்கை அமல்படுத்தின.


latest tamil news


பிரிட்டன் மற்றும் அமெரிக்கா மக்களின் பொது சுகாதாரத்தை விட, பொருளாதாரத்துக்கே முக்கியத்துவம் வழங்கியது. மேலும், பெண் தலைவர்கள் நாடுகளில் சமூக மற்றும் வருமான சமத்துவம் சிறப்பாக உள்ளது. கடந்த ஜன.,30 முதல் ஜூலை 17 வரையிலான நாட்கள் இந்த ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

தினசரி கொரோனா உயிரிழப்பிலும் ஆண் தலைவர்களை விட ஏழு மடங்கு குறைவாக பெண் தலைவர்கள் நாடுகள் உள்ளன.


எந்த நாடுகளில் எத்தனை


ஆய்வில் எடுக்கப்பட்ட 35 நாடுகளில் 10 லட்சம் பேருக்கு எத்தனை பேர் உயிரிழப்பு என்ற விபரம்


பெண் ஆளும் நாடுகள்


1. தைவான் - 0.2
2. நியூசிலாந்து - 4.5
3. கிரீஸ் - 18.5
4. ஐஸ்லாந்து - 29.3
5. நார்வே - 46.8
6. ஈஸ்டானியா - 52.1
7. பின்லாந்து - 59.1
8.டென்மார்க் - 105.3
9. ஜெர்மனி - 108.3
10. பெல்ஜியம் - 845.1


ஆண் ஆளும் நாடுகள்

1. பிரிட்டன் - 664.6
2. ஸ்பெயின் - 607.7
3. இத்தாலி - 579.1
4. சுவீடன் - 553.8
5. பிரான்ஸ் - 461.7
6. அமெரிக்கா - 417.9
7.பிரேசில் - 360.7
8. நெதர்லாந்து - 357.6
9. ஈக்குவடார் - 295.1
10. மெக்சிகே - 291. 4
11. கனடா - 233.8
12. சுவிட்சர்லாந்து - 194.9
13. லக்சம்பெர்க் - 177.3
14. ருமேனியா - 102.4
15. ரஷ்யா -81.7
16. இஸ்ரேல் - 44.3
17. செக் குடியரசு - 33.1
18. அயர்லாந்து - 29.3
19. லிதுவேனியா - 29.1
20. குரேஷியா - 28.9
21. ஆஸ்திரியா - 78.9
22. ஜப்பான் - 7.7
23. தென் கொரியா - 5.7
24. ஆஸ்திரேலியா - 4.4
24. சீனா - 3.2

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
28-ஜூலை-202018:23:14 IST Report Abuse
SaiBaba இந்தியா பாகிஸ்தானை காணோம்
Rate this:
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
28-ஜூலை-202015:45:50 IST Report Abuse
Asagh busagh இங்கே பல பேரு ஜனத்தொகைக்கும், இறப்பு சதவிகிதத்துக்கும் முடிச்சு போட்டு இந்த பெண் தலைவர்களின் அர்ப்பணிப்பை மட்டம் தட்டுகிறார்கள். மக்கள் தொகை எவ்வளவு இருந்தாலும், நோய் தொற்றை பற்றிய உண்மையை, மிக முக்கியமா அரசினால் என்ன செய்ய முடியாது என்பதை தெளிவுபடுத்தி, மருத்துவ வசதியை துரிதபடுத்தி கொரோனாவை வென்றார்கள் இந்த பெண் தலைவர்கள். ஜெர்மனிவாழ் இந்தியனாக சொல்கிறேன் மேர்க்கெல் மிக பெரிய தலைவர். கொரோனாவை தள்ளி வைத்து பார்த்தாலும் ஜெர்மனியின் மருத்துவ வசதியை அடைய அமெரிக்காவுக்கு 100 வருடங்கள் ஆகும்.
Rate this:
Cancel
suriyakumar - chennai,இந்தியா
28-ஜூலை-202015:20:28 IST Report Abuse
suriyakumar ஆமா இதுல இந்தியா இங்கே போச்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X